BS 4 கார்களை விற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு...!

இந்தியாவில் மட்டும் விற்காமல் கிடப்பில் உள்ள BS 4 ரக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

BS 4 கார்களை விற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு...!
மாதிரிப்படம்
  • Share this:
BS 4 ரக கார்களை விற்றுக்கொள்ள கால் உற்பத்தி நிறுவனங்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல் BS 4 கார்களை வாங்கவோ, விற்கவோ அனுமதி கிடையாது. ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களிடம் கிடப்பில் உள்ள கார்களை விற்க முடியாமல் இருந்தனர்.

இந்நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. ஆனால், இந்தக் காலகட்டத்தினுள் ஒரு நிறுவனம் தனது மிச்சமிருக்கும் BS 4 ரக கார்களில் 10 சதவிகிதத்தை மட்டும்தான் விற்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.


இந்தியாவில் மட்டும் விற்காமல் கிடப்பில் உள்ள BS 4 ரக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து பல நிறுவனங்களும் கால அவகாசம் கேட்டதால் தற்போது இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: ஒரு BS 4 பைக் கூட மிச்சமில்லாமல் விற்றுவிட்டோம்- கொண்டாடும் ராயல் என்ஃபீல்டு
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading