இந்தியாவுக்கென 5 புதிய அப்டேட் மாடல்களை அறிமுகம் செய்யும் ஸ்கோடா!

மேம்படுத்தப்பட்ட அத்தனை மாடல்களும் நொய்டாவில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

இந்தியாவுக்கென 5 புதிய அப்டேட் மாடல்களை அறிமுகம் செய்யும் ஸ்கோடா!
ஸ்கோடா கோடியாக் (Photo: Skoda)
  • News18
  • Last Updated: January 11, 2020, 6:49 PM IST
  • Share this:
இந்திய வாடிக்கையாளர்களுக்காக ஸ்கோடா ஆட்டொ இந்தியா நிறுவனம் புதிதாக ஐந்து அப்டேட் ஸ்கோடா கார்களை சந்தையில் களம் இறக்க உள்ளது.

இந்தியாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் ஆட்டோமொபைல் துறை மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. மிகப்பெரிய விற்பனைச் சரிவை ஈடுகட்ட கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து விழாக்கால சலுகைகளை அறிவித்தன. 2020-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே விற்பனையை ஈடுகட்டும் முயற்சிகளில் நிறுவனங்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

ஸ்கோடா நிறுவனம் தனது ஐந்து தயாரிப்புகளை மேம்படுத்தி புதிதாகக் களம் இறக்குகிறது. ரேபிட் 1.0 லிட்டர் பெட்ரோல், கரோக், ஆக்டேவியா RS 245, சூப்பர்ப் ஃபேஸ் லிஃப்ட் மற்றும் கோடியாக் பெட்ரோல் ஆகிய ஐந்து மாடல்களே அப்டேட் வெர்ஷனாக வெளியாக உள்ளன.


மேம்படுத்தப்பட்ட அத்தனை மாடல்களும் நொய்டாவில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2020-ல் கண்காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. ஆட்டோ எக்ஸ்போ 2020 வருகிற பிப்ரவரி 7 முதல் 12-ம் தேதி வரையில் நடைபெற உள்ளன.

மேலும் பார்க்க: 2020-ம் ஆண்டில் ட்ரெண்ட் ஆக உள்ள டாப் எலெக்ட்ரிக் கார்கள்..!
First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்