ஹோம் /நியூஸ் /ஆட்டோமொபைல் /

காருக்கு வரி விதிப்பதில் மாற்றம் தேவை.. புது ஐடியா சொன்ன நிசான்

காருக்கு வரி விதிப்பதில் மாற்றம் தேவை.. புது ஐடியா சொன்ன நிசான்

மாதிரி படம்

மாதிரி படம்

நிசான் நிறுவனம், தற்பொழுது எந்த அடிப்படையில் கார்களுக்கு வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான நிசான் இந்தியா கார்களுக்கு வரிகள் விதிக்கப்படுவது பற்றி முக்கியமான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. நிசான் இந்தியா பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை தன்னுடைய தயாரிப்புகளில் பயன்படுத்தி, ஹைப்ரிட் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தது.

குறிப்பாக, குளோபல் ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இருக்கும் நிசான் நிறுவனம், தற்பொழுது எந்த அடிப்படையில் கார்களுக்கு வரிகள் விதிக்கப்பட வேண்டும் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்கார்களை பொறுத்தவரை, அதில் எந்த வகையான எஞ்சின்கள் இருக்கின்றன மற்றும் காரின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கார்களுக்கு வரிகள் விதிக்கப்படும்.

நிசான் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநரான ராகேஷ் ஸ்ரீவத்சவா, என்ஜின் மற்றும் கார்களின் நீளத்தின் அடிப்படையில் வரிகள் விதிக்கக்கூடாது என்றும், ஒரு வாகனத்தால் எவ்வளவு உமிழ்வு ஏற்படுகிறது என்ற அடிப்படையில் தான் கார்களுக்கு வரிகள் விதிக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது ஒரு கார் வெளியேற்றும் புகையின் அளவைப் பொறுத்து வரி விதிக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். உமிழ்வு என்பது புகை வெளியேறுவதே ஆகும்.

Read More : தீபாவளி ஸ்பெஷல்.. குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் ஓலா!

நிசான் இந்தியா தரப்பில் ஏன் இப்படி ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது என்ற கேள்வி பலருக்கும் எழும்பியுள்ளது.

காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு இந்தியாவில் ஹைப்ரிட் மாடல் வாகனங்களை, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சத்தோடு அறிமுகம் செய்ய இருப்பதால் இப்படி ஒரு பரிந்துரையை மேற்கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், ஏற்கனவே இருக்கும் வரி அட்டவணையின் படி, அதிகமாக வரி செலுத்த வேண்டி இருப்பதாலும், உமிழ்வுகளின் அடிப்படையில் வரிகளை மாற்றினால், வரி செலுத்தவேண்டிய தொகை குறையலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே அமலில் உள்ள வரி விதிப்பு விவரங்கள்:

ஏற்கனவே அரசாங்கம், வாகனத்தின் நீளம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டின் அடிப்படையில், நான்கு மீட்டர்கள் வரைக்குமான வாகனங்களுக்கு குறிப்பிட்ட வரி அமைப்பும், நான்கு மீட்டர்களுக்கு அதிகமாக இருக்கும் வாகனங்களுக்கு வேற வரி அமைப்பில் வரிகளும் விதித்துள்ளது.

தற்போது நாட்டின் தற்போதைய ஜிஎஸ்டி விதிகளின்படி பயணிகளின் கார் அதிகபட்ச வரி வரியான 28% ஸ்லாபில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து இதற்கு செஸ் தொகையும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 1200 சிசிக்கும் குறைவான இன்ஜின் கெப்பாசிட்டி கொண்ட சிறிய அளவிலான பெட்ரோல் கார்களுக்கு 28% GST வரிக்கு 1% செஸ் மட்டுமே விதிக்கப்படுகிறது. ஆனால் 1500 சிசிக்கு குறைவான என்ஜின் கெப்பாசிட்டி கொண்ட டீசல் கார்களுக்கு GST உடன், 3% பெர்சென்ட் செஸ் விதிக்கப்படுகிறது.

4000 மிமீக்கும் நீளமான மற்றும் 169 mm கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ்யூவி கார்களுக்கு 50% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹைபிரிட் வாகனங்களுக்கு 43% வரி விதிக்கப்படுவதால், மாசுபாடு உமிழ்வு அளவுகளுக்கு ஏற்றவாறு வரிகள் விதிப்பது கார் உற்பத்தியாளர்களுக்கு அதிக வரி செலுத்துவதை தவிர்க்க உதவும் என்று கருதப்படுகிறது.

மேக்நைட் மற்றும் கிகஸ் என்ற ஆகிய இரண்டு மாடல்களை அதிகமாக விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் தனக்கென்று கணிசமான வாடிக்கையாளர் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நிசான் இந்தியா எக்ஸ்-டிரைல், ஜ்யூக், மற்றும் க்வாஷ்கை உள்ளிட்ட உலக அளவில் பிரபலமாக இருக்கும் எஸ்யூவி வாகனங்களையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து தன்னுடைய சந்தையை வலுப்படுத்திக் கொள்ளும் திட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Automobile