புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்கள் கார் விலைகளை உயர்த்தியுள்ளன. பல நிறுவனங்கள் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், சில நிறுவனங்கள் உத்தேச விலை உயர்வை கூறியுள்ளன. முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா நிறுவனம் பட்ஜெட் விலை முதல் விலை மிகுந்த சொகுசு கார்கள் வரை தயாரித்து இந்தியாவில் சந்தைப்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் ஜனவரி மாதத்திலேயே விலை உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளது. அனைத்து விதமான மாடல்களிலும் தோராயமாக ரூ.30,000 விலை உயர்வதாகக் கூறப்படுகிறது.
மற்றொரு முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கமர்சியல் வாகன விலைகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் உயரும் என்று அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய விலையை விட கூடுதலாக 2 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடலுக்கு ஏற்ப விலை உயர்வு சற்று மாறுபடும் எனவும் கூறியுள்ளது.
மாருதி சுசுகி நிறுவனமும் தனது அனைத்து மாடல் கார்களின் விலையும் ஜனவரி மாதத்தில் உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் விலை உயர்வு குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. அதேபோல், ஹூன்டாய் நிறுவனமும் தனது கார்களின் விலை அடுத்த மாதம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. தயாரிப்பு மற்றும் உள்ளீட்டு செலவு அதிகரிப்பு காரணமாகவே விலை உயர்வு மேற்கொள்ளப்படுவதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.
பட்ஜெட் கார்களைப் போலவே சொகுசு கார்களான ஆடி, மெர்சிடஸ் பென்ஸ், ரெனால்ட், ஜீப் மற்றும் எம்.ஜி உள்ளிட்ட அனைத்து கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.ஆடி நிறுவனம் தனது கார்களின் விலையை 1.7 சதவீதம் உயர்த்தவும், மெர்சீடஸ் பென்ஸ் நிறுவனம் சுமார் 5 சதவீதம் வரை விலை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளன.இதனால் புதிதாக கார் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையளர்களுக்கு கடந்தாண்டை ஒப்பிடுகையில் செலவிடும் தொகை அதிகமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Car, Honda, Maruti Suzuki, New Year 2023