’செகண்ட் ஹேண்ட்’ கார்களுக்கு அதிகரிக்கும் மவுசு..!

இதுவரையில் இல்லாத அளவு ஆன்லைனில் கார் வாங்கும் விற்கும் நடைமுறை 54 சதவிகிதம் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

’செகண்ட் ஹேண்ட்’ கார்களுக்கு அதிகரிக்கும் மவுசு..!
OLX
  • News18
  • Last Updated: September 13, 2019, 6:44 PM IST
  • Share this:
புது கார் விற்பனை பெரும் சரிவைச் சந்தித்து வரும் வேளையில் இந்தியாவில் ’செகண்ட் ஹேண்ட்’ கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. புதிய கார்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் பல கார் உற்பத்தித் தொழிற்சாலைகள் தற்காலிகமாக உற்பத்தியையே நிறுத்தியுள்ளன. இந்த சூழலில் பயன்படுத்திய ’செகண்ட் ஹேண்ட்’ கார்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.

’செகண்ட் ஹேண்ட்’ கார்களுக்கான வரவேற்பு அதிகரிப்பதால் 2019-ம் ஆண்டின் இறுதியில் ’செகண்ட் ஹேண்ட்’கார் துறை 10 சதவிகித வளர்ச்சியைப் பெற்றிருக்கும். அதாவது 4.4 மில்லியன் பயன்படுத்திய கார்கள் விற்பனை ஆகியிருக்கும் என OLX ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.


தற்போதைய சூழலில் செகண்ட் ஹேண்ட் கார் விற்பனைத்துறையின் விற்பனை எண்ணிக்கை 2018-ன் அடிப்படையில் 4 மில்லியன் ஆக உள்ளது. 2019-ல் இது 4.4 மில்லியன் ஆக உயரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் OLX அறிக்கை கூறுகையில், ”இந்த விற்பனை எண்ணிக்கை 2020-ம் ஆண்டு 5 மில்லியன் ஆகவும் 2023-ம் ஆண்டில் 6.6 மில்லியன் ஆகவும் வளர்ச்சி அடையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தையை தலைமுறையினரைவிட மில்லியனியல் தலைமுறையினர் பயன்படுத்திய செகண்ட் ஹேண்ட் கார்களைப் பயன்படுத்தத் தயங்குவதில்லை என்றும் ஆய்வு விளக்குகிறது. மில்லியனியல் தலைமுறையினரால்தான் ஆன்லைன் கார் விற்பனைத் தளங்களும் நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகிறதாம். இதுவரையில் இல்லாத அளவு ஆன்லைனில் கார் வாங்கும் விற்கும் நடைமுறை 54 சதவிகிதம் வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: ₹4 லட்சம் வரையில் ஆஃபர்...இந்திய ஹோண்டா கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடிபுதிய மோட்டார் வாகன சட்டம்... மற்ற மாநிலங்கள் கூறுவது என்ன?
First published: September 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading