1.31 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது போர்ஷே கெயின் கூப்பே!

”இதே காரின் டர்போ ரக வாகனம் என்றால் அதனது விலை 1.97 கோடி ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது”

1.31 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது போர்ஷே கெயின் கூப்பே!
போர்ஷே கெயின் கூப்பே
  • News18
  • Last Updated: December 13, 2019, 9:01 PM IST
  • Share this:
போர்ஷே தனது 1.31 கோடி ரூபாய் மதிப்புள்ள கெயின் கூப்பே எஸ்யூவி காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது.

இதே காரின் டர்போ ரக வாகனம் என்றால் அதனது விலை 1.97 கோடி ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போர்ஷேவின் அக்மார்க் வடிவமைப்பு மற்றும் தரத்துடனே புதிய கெயின் கூப்பே எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக காரின் மேற்கூரைப் பகுதியும் சக்கரங்களுக்கான வடிவமைப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

காரின் உட்கட்டமைப்பு வடிவமைப்பைப் பொறுத்த வரையில் பின் புற இருக்கை பகுதிகளில் கால் வைப்பதற்கான இடம் விரிவு செய்யப்பட்டுள்ளது. 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. ஏசி, ஆடியோ கன்ட்ரோல், 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. உட்புறம் முழுவதும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


கூடுதலாக ஆட்டோ எல்இடி விளக்குகள், காலநிலை கன்ட்ரோல், பார்க்கிங் சென்சார், 18 முறைகளில் மாற்றம் செய்துகொள்ளக் கூடிய வகையிலான சீட், 8 ஏர்பேக், ஏபிஎஸ் பாதுகாப்பு என சர்வதேச தரம் வாய்ந்த அத்தனை சொகுசு வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் இக்காரில் இணைக்கப்பட்டுள்ளன.

3.0 லிட்டர் டர்போசார்ஜ் பெட்ரோல் V6 என்ஜின் கொண்டுள்ள கெயின் கூப்பே 450Nm டார்க் வெளியீட்டுக்கு 340hp திறன் கொண்டதாக உள்ளது. டர்போ V8 என்ஜின் ரகத்தில் 550hp திறன் வெளியீட்டுக்கு டார்க் வெளியீடு 770Nm ஆக உள்ளது.

மேலும் பார்க்க: BS-VI ரக காராக அப்டேட் ஆன ஹோண்டா சிட்டி... தொடங்கியது விற்பனை...!
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்