2019-ல் வெளியாகும் நிசானின் எலெக்ட்ரிக் கார் Leaf!

முதற்கட்டமாக இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் மட்டுமே எலெக்ட்ரானிக் Leaf விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

Web Desk | news18
Updated: January 24, 2019, 12:12 PM IST
2019-ல் வெளியாகும் நிசானின் எலெக்ட்ரிக் கார் Leaf!
நிசான்
Web Desk | news18
Updated: January 24, 2019, 12:12 PM IST
நிசான் கார் நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் காரான Leaf காரை 2019-ம் ஆண்டில் அறிமுகம் செய்து இ-கார் வகைகளின் முன்னோடியாகத் திகழத் தயாராகி வருகிறது.

‘எலெக்ட்ரிக் ரக கார்களின் முன்னோடியாக சர்வதேச அளவில் திகழ வேண்டும் எனத் தொடர்ந்து நிசான் உழைத்து வருகிறது. இந்த வகையில் இந்தியாவிலும் எங்களது எலெக்ட்ரிக் காரை களம் இறக்க உள்ளோம். Leaf தவிர கூடுதலாக சில எலெக்ட்ரிக் கார்களையும் இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சித்து வருகிறோம்’ என ஜப்பானிய கார் நிறுவனமான நிசானின் பேமன் கார்கர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இதுவரையில் நிசான் தனது எலெக்ட்ரிக் காரான Leaf-ஐ கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்ததிலிருந்து இதுவரையில் 3.5 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது. இதுவரையில் இந்தியாவுக்காக எவ்வளவு கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளது என்பது குறித்து நிசான் நிறுவனம் இதுவரையில் முடிவு செய்யவில்லை என்றே கூறுகிறது.


முதற்கட்டமாக இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் மட்டுமே எலெக்ட்ரானிக் Leaf விற்பனைக்குக் கொண்டு வரப்பட உள்ளது.

மேலும் பார்க்க: ஆல் இன் ஆல் அரசியல் | 24-01-2019
First published: January 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...