இந்தியாவின் முதல் Jeep க்ராண்ட் செரோக்கி SRT கார் - முதல் பயணத்தைத் தொடங்கிய தோனி!

6.2 லிட்டர் V8 என்ஜின் உடன் 463bhp,624 Nm டார்க் வெளியீடு கொண்டுள்ளது இந்த ஜீப் கார். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் Jeep க்ராண்ட் செரோக்கி SRT கார் - முதல் பயணத்தைத் தொடங்கிய தோனி!
6.2 லிட்டர் V8 என்ஜின் உடன் 463bhp,624 Nm டார்க் வெளியீடு கொண்டுள்ளது இந்த ஜீப் கார். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
  • News18
  • Last Updated: September 21, 2019, 5:15 PM IST
  • Share this:
ஜீப் க்ராண்ட் செரோக்கி SRT காரை இந்தியாவிலேயே முதல் நபராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி வாங்கியுள்ளார். ஜீப் க்ராண்ட் செரோக்கி SRT கார் இந்தியாவிலேயே தோனி ஒருவரிடம் மட்டும்தான் உள்ளது.

இந்தக் கார் தோனியின் இல்லத்தில் டெலிவரி செய்யப்பட்டபோது அவர் ராணுவ பயிற்சியில் இருந்தார். இதனால், தோனியின் மனைவி சாக்‌ஷி சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனிக்காகக் காத்திருக்கும் ஜீப் க்ராண்ட் செரோக்கி SRT எனப் பதிவிட்டிருந்தார்.


இதையடுத்து இந்த போஸ்ட் வைரலாக தோனி எப்போது ஜீப் க்ராண்ட் செரோக்கி SRT-யை ஓட்டுவார் என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் வைரலானது. உலகின் டாப் மாடல் பைக் மற்றும் கார்களை வாங்கி அதில் பயணம் செய்வதை தனது விருப்பமாகக் கொண்டுள்ளவர் தோனி. இவரது வீட்டில் Ferrari 599 GTO, ஹம்மர் H2, GMC சியரா என்ற டாப் 4 சக்கர வாகனங்கள் உள்ளன.

இதேபோல் இரு சக்கர வாகனங்கள் வரிசையில் கவாஸ்கி நின்ஜா H2, கன்ஃபெடரேட் ஹெல்கேட், BSA, சுசூகி ஹயாபுசா, நார்டன் விண்டேஜ் எனப் பல அதிரடி பைக்குகளும் வைத்துள்ளார் தோனி. பைக், கார்களின் பிரியர் ஆன இவரது தொகுப்புகளுள் சமீபத்தில் இணைந்துள்ளது இந்தியாவில் முதலும் ஒரேயொரு காரான ஜீப் க்ராண்ட் செரோக்கி SRT.

இந்நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய தோனி தனது மனைவி சாக்‌ஷி மற்றும் நண்பர்களை அழைத்துக்கொண்டு காரில் வலம் வந்தார். 1.12 கோடி மதிப்புள்ளது இந்த ஜீப் க்ராண்ட் செரோக்கி SRT.

6.2 லிட்டர் V8 என்ஜின் உடன் 463bhp,624 Nm டார்க் வெளியீடு கொண்டுள்ளது இந்த ஜீப் கார். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமல்லாது உட்புறத் தோற்றத்திலும் சிறந்த வடிவமைப்பு கொண்டதாக உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடனான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டெரெய்ன் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் முறை, QUADRA-TRAC II க்ரிப் கன்ட்ரோல் என முற்றிலுமாக அசத்துகிறது ஜீப் க்ராண்ட் செரோக்கி SRT.

மேலும் பார்க்க: 1 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் அமேசான் - காற்று மாடுபாடைக் குறைக்க புது திட்டம்

5 நீதிபதிகள் கொண்ட நிரந்தர அரசியல் சாசன அமர்வு
First published: September 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading