MG மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி இன்று வெளியாகிறது: Live வீடியோ!

MG ZS காருக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 340 கி.மீ தூரம் வரையில் பயணிக்க முடியும்.

MG மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி இன்று வெளியாகிறது: Live வீடியோ!
MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி
  • News18
  • Last Updated: January 23, 2020, 11:40 AM IST
  • Share this:
MG மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இன்று இந்தியாவில் வெளியிடுகிறது.

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காருக்குப் போட்டியாக MG ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி இருக்கும் என நம்பப்படுகிறது. MG நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே நாட்டின் பல முக்கிய நகரங்களில் எலெக்ட்ரிக் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணியைத் தொடங்கிவிட்டது.

MG மோட்டார்ஸ் ஹெக்டார் எஸ்யூவி மூலம் இந்திய சந்தையில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இரண்டாவது காரை எலெக்ட்ரிக் வாகனமாக அறிமுகம் செய்துள்ள MG, ZS காருக்கும் அதிகப்படியான வரவேற்பு கிடைக்கும் என்றே எதிர்பார்கிறது. வெளிநாடுகளில் உள்ள ஒரு எலெக்ட்ரிக் காரின் அத்தனை அப்டேட் அம்சங்களும் MG ZS-லும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.


MG ZS காரை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய சுமார் 2,200 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. MG ZS காருக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் 340 கி.மீ தூரம் வரையில் பயணிக்க முடியும் என்பது சிறப்பம்சமாகக் கருதப்படுகிறது.

44.5 kWh லிக்விட் கூல் NMC பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 143 PS திறனுடன் டார்க் வெளியீடு 353 Nm ஆக உள்ளது. வெறும் 8.5 விநாடிகளில் 100 கிமீ வேகத்தை இந்தக் கார் எட்டிவிடும்.
மேலும் பார்க்க: 12 ரகங்களில் பட்ஜெட் விலையில் வெளியானது ஹூண்டாய் ஆரா செடான்!
First published: January 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading