அறிமுகமான ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை - உற்சாகத்தில் MG ஹெக்டார்

ஹூண்டாய் வென்யூவுக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது ‘கனெக்டட் கார்’ என்ற பெருமையை MG ஹெக்டார் பெற்றுள்ளது.

அறிமுகமான ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை - உற்சாகத்தில் MG ஹெக்டார்
MG ஹெக்டார்
  • News18
  • Last Updated: August 1, 2019, 3:09 PM IST
  • Share this:
MG ஹெக்டார் எஸ்யூவி கார் ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை MG மோட்டார் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் 12.18 லட்சம் ரூபாய் மதிப்பில் MG ஹெக்டார் எஸ்யூவி MG மோட்டார் அறிமுகம் செய்தது. விற்பனைப் போட்டிகள் அதிகரித்துக் காணப்படும் சூழலில் அதுகுறித்து MG மோட்டார் இந்தியா வணிகப்பிரிவுத் தலைவர் கவுரவ் குப்தா கூறுகையில், “ஹெக்டார் காருக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவு மிகப்பெரியது. வாகன விற்பனைச் சேவையிலும் தொடர் பராமரிப்புச் சேவையிலும் சிறப்பாகச் செயலாற்றி இந்த ஆதரவைத் தொடர வைப்போம்” என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் நாடு முழுவதும் 28ஆயிரம் முன்பதிவுகள் உள்ளதால் முன்பதிவு முறையையே MG மோட்டார் நிறுத்தியுள்ளது. மீண்டும் முன்பதிவு எப்போது தொடங்கும் என்பதை விரைவில் அறிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாதத்திலிருந்து முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களால் ஏற்பட்ட டிமாண்டை தீர்க்க உற்பத்தியை 3ஆயிரம் வாகனங்களாக அதிகரிக்க MG மோட்டார் முடிவு செய்துள்ளது.


ஹூண்டாய் வென்யூவுக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது ‘கனெக்டட் கார்’ என்ற பெருமையை MG ஹெக்டார் பெற்றுள்ளது. M2M சிம் முறையை அறிமுகப்படுத்தும் முதல் எஸ்யூவி கார் என்ற பெருமையையும் MG ஹெக்டார் பெற்றுள்ளது.

மேலும் பார்க்க: 60 நாளில் 50ஆயிரம் பேர் முன்பதிவு... ஹூண்டாய் வென்யூவுக்கு குவியும் ஆதரவு!
First published: August 1, 2019, 3:09 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading