அவதார் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ்... அசத்தல் தோற்றத்தில் விஷன் AVTR கார்!

முக்கியமாக சர்வதேச அளவில் உள்ள அவதார் திரைப்பட ரசிகர்களுக்கும் ஜேம்ஸ் கேமரான் ரசிகர்களுக்கும் நிச்சயம் இந்தக் கார் ஒரு புதுவித அனுபத்தைக் கொடுக்கும்.

அவதார் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ்... அசத்தல் தோற்றத்தில் விஷன் AVTR கார்!
மெர்சிடிஸ் பென்ஸ் அவதார்
  • News18
  • Last Updated: January 11, 2020, 7:35 PM IST
  • Share this:
அவதார் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அவதார் திரைப்பட இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உடன் இணைந்து புதிய ரக விஷன் AVTR காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

முற்றிலும் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் விஷன் AVTR கார் உருவாக்கப்பட்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறத் தோற்றம் முழுவதும் ஒரு சாதாரண காரிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சாதரணமாக காரில் உள்ளது போன்று ஸ்டியரிங் வீல் இந்தக் காரில் இல்லை.

காரின் முன்பக்கத்தில் உள்ள கன்சோல் பகுதியில் ஓட்டுநரின் கைகளை வைத்தால் போதும். நம் தேவைக்கு ஏற்ப காரை இயக்கிக்கொள்ளலாம். முக்கியமாக சர்வதேச அளவில் உள்ள அவதார் திரைப்பட ரசிகர்களுக்கும் ஜேம்ஸ் கேமரூன் ரசிகர்களுக்கும் நிச்சயம் இந்தக் கார் ஒரு புதுவித அனுபத்தைக் கொடுக்கும். இந்தக் காரில் 350 kW மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாக உள்ளது.


மேலும் பார்க்க: 5ஜி ஸ்மார்ட்போனே இன்னும் வரவில்லை... அதற்குள் 5ஜி உடனான BMW iNext எஸ்யூவி கார் அறிமுகம்!
First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்