இந்திய விற்பனையில் முதல் இடம் பிடித்த மெர்சிடிஸ் பென்ஸ்!

இந்தியக் கார் சந்தையில் அதிகம் விற்பனையான சொகுசுக் கார்கள் பட்டியலில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.

Web Desk | news18
Updated: December 8, 2018, 8:15 PM IST
இந்திய விற்பனையில் முதல் இடம் பிடித்த மெர்சிடிஸ் பென்ஸ்!
இந்தியக் கார் சந்தையில் அதிகம் விற்பனையான சொகுசுக் கார்கள் பட்டியலில் மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடம் பிடித்துள்ளது.
Web Desk | news18
Updated: December 8, 2018, 8:15 PM IST
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்திய சொகுசு கார்களுக்கான விற்பனை சந்தையில் முதலிடம் பிடித்துள்ளது.

ஜெ.டி.பவர் என்னும் சர்வதேச சந்தைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனம் இந்தியக் கார் விற்பனைச் சந்தை குறித்து ஆய்வு நடத்தியது. இதில் 903 கார்கள் விற்ற மெர்சிடிஸ் பென்ஸ் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் பி.எம்.டபிள்யூ மற்றும் மூன்றாவது இடத்தில் ஆடி கார் நிறுவனம் உள்ளது. இதில் பி.எம்.டபிள்யூ 900 கார்களும் ஆடி 888 கார்களும் விற்பனை செய்துள்ளன.

வெறும் விற்பனை எண்ணிக்கையில் மட்டுமல்லாது டீலர்ஷிப் வசதி, டெலிவரி தரம், விற்பனை நிர்வாகம், வாகனப் பதிவு வேலைகள் என அனைத்தும் நிர்வாகம் தரப்பிலும் வாடிக்கையாளர்களின் தரப்பிலும் ஆய்வு செய்யப்பட்டே இந்த ரேங்கிங் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில், சொகுசு கார்கள் வாங்கும் இந்தியர்களில் 28 சதவிகிதத்தினர் பல கார் பிராண்டுகளை ஆராய்ந்த பின்னரே வாங்குகின்றனர். ஆனால், 65 சதவிகிதத்தினர் இன்டெர்நெட்டை மட்டுமே தேடு தளமாகப் பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: சீனாவில் சாதிக்குமா 2.O ?
First published: December 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...