3% வரையில் விலையை அதிகரித்த மெர்சிடிஸ் பென்ஸ்..!

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சொகுசு கார்கள் விற்பனை 30 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

3% வரையில் விலையை அதிகரித்த மெர்சிடிஸ் பென்ஸ்..!
மெர்சிடிஸ் பென்ஸ்
  • News18
  • Last Updated: July 25, 2019, 7:01 PM IST
  • Share this:
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா குறிப்பிட்ட சில கார் மாடல்களுக்கு 3 சதவிகிதம் வரையில் விலையை அதிகரித்துள்ளது.

குறிப்பிட்ட சில கார்களுக்கான அதிகப்படுத்தப்பட்ட விலை நிலவரம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்தே அமலுக்கு வருகிறது. ஆட்டோமொபைல்ஸ் உதிரிப் பாகங்கள் மீதான சுங்க வரி உயர்வு, செஸ் வரி, கலால் வரி ஆகியவை அதிகரித்த காரணத்தினாலே வாகனங்களின் விற்பனை விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தலுக்குப் பின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ந்து வருவதும் இந்திய சொகுசு கார்கள் சந்தையின் வீழ்ச்சிக்குக் காரணமாகியுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது. கூடுதலாக வரும் காலங்களில் அதிகரிக்க உள்ள ஜிஎஸ்டி, பொருளாதார மந்தநிலை ஆகியவை மேலும் சரிவைத்தான் தரும் என்றும் இதனது வெளிப்பாடு மக்கள் மீதுதான் விலை உயர்வாக விழும் என்றும் கூறப்படுகிறது.


கடந்த 2018-ம் ஆண்டின் முதல் பாதியில் 20ஆயிரம் சொகுசு கார்கள் இந்தியாவில் விற்பனை ஆகியுள்ளன. ஆனால், 2019-ன் முதல் அரையாண்டில் இந்த விற்பனை நிலவரம் 15,000-17,000 இடையேதான் உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சொகுசு கார்கள் விற்பனை 30 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மேலும் பார்க்க: மணிக்கு 17 மரணங்கள்... பதற வைக்கும் சாலை விபத்துகளில் தமிழகத்துக்கு 2-வது இடம்!
First published: July 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்