எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ்..!

ஆனாலும், இந்தியாவில் முதலிடத்திலேயே நீடிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: July 20, 2019, 7:00 PM IST
எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ்..!
மெர்சிடிஸ் பென்ஸ் லோகோ
Web Desk | news18
Updated: July 20, 2019, 7:00 PM IST
இந்தியாவில் தொடர்ந்து கார் சந்தையில் சொகுசு கார்கள் விற்பனை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.

இந்திய கார் சந்தையில் சொகுசு கார்கள் விற்பனை நிறுவனங்களில் முதலிடத்தில் தொடர்ந்து மெர்சிடிஸ் பென்ஸ் இருந்து வருகிறது. ஆனால், 2019-ம் ஆண்டின் முதல் பாதியில் 18.60 சதவிகித வீழ்ச்சியை மெர்சிடிஸ் பென்ஸ் சந்தித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் பாதியில் 8,061 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால், 2019-ம் ஆண்டு கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலகட்டத்தில் விற்பனை வீழ்ச்சி அடைந்து 6,561 பென்ஸ் கார்களே விற்பனை ஆகியுள்ளன.


ஜெர்மன் கார் நிறுவனமான மெர்சிடிஸ், உயர்ந்த வட்டி விகிதம், பணவீக்கம், ஏற்றுமதி தயாரிப்புகளுக்கான வரி உயர்வு ஆகியவையே இந்த விற்பனை வீழ்ச்சிக்கான காரணம் எனக் கூறுகிறது. ஆனாலும், இந்தியாவில் முதலிடத்திலேயே நீடிப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: ஒரே நாளில் சுமார் 6000 பேர் முன்பதிவு- சாதனை படைத்த கியா செல்டாஸ் கார்!
First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...