ஹூண்டாயை வீழ்த்திய மாருதி சுசூகி... சிறந்த எஸ்யூவி பட்டத்தைப் பெற்ற கார் எது..?

இந்தியாவைப் பொறுத்தவரையில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.

ஹூண்டாயை வீழ்த்திய மாருதி சுசூகி... சிறந்த எஸ்யூவி பட்டத்தைப் பெற்ற கார் எது..?
வித்தாரா ப்ரெஸ்சா
  • News18
  • Last Updated: January 11, 2020, 3:30 PM IST
  • Share this:
இந்தியாவின் சிறந்த எஸ்யூவி என்ற பெருமையை மாருதி சுசூகியின் வித்தாரா ப்ரெஸ்சா பெற்றுள்ளது.

டிசம்பர் 2019-ல் மட்டும் 13,658 வித்தாரா ப்ரெஸ்சா வாகனங்களை விற்பனை செய்து மாருதி சுசூகி நிறுவனம் எஸ்யூவி பிரிவில் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் விற்பனையைவிட இது 44 சதவிகிதம் அதிகம் என்பதால் மகிழ்ச்சியில் உள்ளது மாருதி சுசூகி நிறுவனம்.

சிறந்த எஸ்யூவி கார் பிரிவில் இரண்டாம் இடத்தை ஹூண்டாய் வென்யூ பிடித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் 9,521 வென்யூ கார்களை விற்பனை செய்துள்ளது. மூன்றாம் இடத்தில் டாடா நெக்ஸான் கார் உள்ளது. இந்தக் காரின் டிசம்பர் விற்பனை எண்ணிக்கை 4,350 ஆக உள்ளது.


நான்காம் இடத்தை மஹிந்திராவின் XUV 300 பிடித்துள்ளது. ஐந்தாம் இடம் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காருக்கு கிடைத்துள்ளது. கடைசி இடங்களை ஹோண்டா WR-V மற்றும் TUV 300 ஆகிய கார்கள் பெற்றுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.

மேலும் பார்க்க: விமானம் கிளம்பும்போது கழண்டு விழுந்த சக்கரம்... வீடியோ எடுத்த விமானப் பயணி...!
First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்