டீசல் கார் உற்பத்தி நிறுத்தம் ஏன்? விளக்கம் அளித்த மாருதி சுசூகி

இந்திய சந்தையைப் பொறுத்த வரையில் மொத்த உற்பத்தியில் 23% டீசல் கார்களையே மாருதி சுசூகி உற்பத்தி செய்கிறது.

Web Desk | news18
Updated: April 25, 2019, 8:18 PM IST
டீசல் கார் உற்பத்தி நிறுத்தம் ஏன்? விளக்கம் அளித்த மாருதி சுசூகி
மாருதி சுசூகி. (Photo: Reuters)
Web Desk | news18
Updated: April 25, 2019, 8:18 PM IST
2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் மாருதி சுசூகி நிறுவனம் டீசல் கார்கள் உற்பத்தியையும் விற்பனையையும் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான மாருதி சுசூகி வருகிற 2020-ம் ஆண்டு ஏப்ரல் உடன் டீசல் கார்கள் உற்பத்தியை நிறுத்துகிறது. தற்போதைய சூழலில் இந்தியாவில் அதிகப்படியான டீசல் ரக கார்கள் உற்பத்தி செய்து வரும் நிறுவனமாக மாருதி சுசூகி உள்ளது. இந்திய சந்தையைப் பொறுத்த வரையில் மொத்த உற்பத்தியில் 23% டீசல் கார்களையே மாருதி சுசூகி உற்பத்தி செய்கிறது.

இதுகுறித்து மாருதி சுசூகி இந்தியா தலைவர் பார்கவா கூறுகையில், “2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் எங்கள் நிறுவனம் டீசல் கார்களை விற்பனை செய்யாது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் மாசு வெளியீடு கட்டுப்பாடு விதிமுறையால் டீசல் கார்கள் உற்பத்தி என்பது அதிக செலவுகளை ஏற்படுத்தும். இதனாலே உற்பத்தி நிறுத்தப்படுகிறது” என்றார்.

தற்போதைய சூழலில் மாருதி சுசூகி நிறுவனம் டீசல் ரகங்களில் எஸ்-க்ராஸ், சியஸ், விதாரா ப்ரெஸ்ஸா, டிசைர், பலேனோ மற்றும் சிவ்ஃப்ட் கார்களை வெளியிட்டு வருகிறது.

மேலும் பார்க்க: சித்திரையில் வரும் புயலால் ஆபத்து - பாரம்பரிய முறையில் மீனவர்கள் கணிப்பு
First published: April 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...