மவுசு குறைந்த ஹேட்ச்பேக் ரக கார்கள்- பலத்த வீழ்ச்சியைச் சந்தித்த மாருதி சுசூகி

ஏற்றுமதியும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைவிட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10.8 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: September 2, 2019, 3:04 PM IST
மவுசு குறைந்த ஹேட்ச்பேக் ரக கார்கள்- பலத்த வீழ்ச்சியைச் சந்தித்த மாருதி சுசூகி
மாருதி சுசூகி (மாதிரிப்படம்)
Web Desk | news18
Updated: September 2, 2019, 3:04 PM IST
இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான மாருதி சுசூகியின் விற்பனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 32.7 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுசூகி மொத்தம் 1,06,413 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை 1,58,189 ஆக இருந்தது. 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை 34.3 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக சிறிய ரக கார்களான ஆல்டோ, வேகன் ஆர் ஆகிய கார்கள் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

கடந்த 2018 ஆகஸ்ட்டில் ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார்கள் மொத்தம் 35,895 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால், 2019 ஆகஸ்ட்டில் இந்த விற்பனை விகிதம் 71.8 சதவிகிதம் வீழ்ந்து 10,123 கார்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. இதேபோல் காம்பேக்ட் ரக கார்களான ஸிஃப்ட், செலேரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய கார்கள் விற்பனை 23.9 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளன.


ஏற்றுமதியும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தைவிட இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 10.8 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: அதே சொகுசுடன் நவீன வடிவமைப்புகளுடன் மீண்டும் வருகிறது அம்பாஸடர்!

நாளை முதல் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு கட்டணம் உயர்வு

Loading...

First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...