தொடர்ந்து ஏழாம் மாதமாக உற்பத்திக் குறைப்பு நடவடிக்கை- மோசமான வீழ்ச்சியில் மாருதி சுசூகி

விற்பனை இல்லாத காரணத்தாலே தொடர்ந்து தனது உற்பத்தியையும் மாருதி சுசூகி குறைத்துக்கொண்டு வருகிறது.

Web Desk | news18
Updated: September 3, 2019, 3:26 PM IST
தொடர்ந்து ஏழாம் மாதமாக உற்பத்திக் குறைப்பு நடவடிக்கை- மோசமான வீழ்ச்சியில் மாருதி சுசூகி
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: September 3, 2019, 3:26 PM IST
மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து ஏழாம் மாதமாக தனது உற்பத்தியை 33.99 சதவிகிதம் குறைத்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தனது உற்பத்தி சதவிகிதத்தை 33.99% ஆக குறைத்துக்கொண்டுள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 1,68,725 வாகனங்களை மாருதி சுசூகி உற்பத்தி செய்திருந்தது.

ஆனால், 2019 ஆகஸ்ட்டில் 1,11,370 வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பேசஞ்சர் ரக வாகன உற்பத்தியும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாகவே அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மினி மற்றும் காம்பேக்ட் ரக கார்களின் உற்பத்தியும் சரிந்துள்ளது.


2018 ஆகஸ்ட் மாதத்தில் ஆல்டோ, புது வேகன் ஆர், செலேரியோ, இக்னிஸ், சிஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய கார்களின் மொத்த உற்பத்தி எண்ணிக்கை 1,22,824 ஆகும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் இந்த எண்ணிக்கை சரிந்து 80,909 ஆக உள்ளது.

யூவி ரக வாகனங்களான ப்ரெஸ்ஸா, எர்டிகா, எஸ்-க்ராஸ் போன்ற கார்கள் 34.85 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. விற்பனை இல்லாத காரணத்தாலே தொடர்ந்து தனது உற்பத்தியையும் மாருதி சுசூகி குறைத்துக்கொண்டு வருகிறது.

மேலும் பார்க்க: ஒரே மாதத்தில் 6,200 கார்கள்... விற்பனையில் அடித்து நொறுக்கிய கியா செல்டாஸ்..!

Loading...

ஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு
First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...