மாருதி சுசூகி கார்களுக்கு ₹70ஆயிரம் வரையில் தள்ளுபடி..!

நெக்சா டீலர்ஷிப்பின் கீழ் BS4 பெட்ரோல் மாடல் கார்கள் அதிகளவில் ஸ்டாக் இருப்பதால் இந்த தள்ளுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

மாருதி சுசூகி கார்களுக்கு ₹70ஆயிரம் வரையில் தள்ளுபடி..!
பலேனோ (மாதிரிப்படம்)
  • News18
  • Last Updated: August 6, 2019, 5:38 PM IST
  • Share this:
மாருதி சுசூகி நெக்சா டீலர்கள் பலேனோ, சியஸ், இக்னிஸ் மற்றும் S-க்ராஸ் ஆகிய கார்களுக்கு இந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

2019 ஜூலையில் மாருதி சுசூகியின் விற்பனை 1 லட்சம் வாகனங்கள் வரையில் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மாருதி சுசூகி சியஸ் காருக்கு 70 ஆயிரம் ரூபாய் விற்பனை விலையிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.3 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று ரக என்ஜின்களைக் கொண்டுள்ளது சியஸ்.

இதேபோல், மாருதி சுசூகி S-க்ராஸ் கார் 60 ஆயிரம் ரூபாயும் இக்னிஸ் கார் 55 ஆயிரம் ரூபாயும் பலேனோ 45 ஆயிரம் ரூபாயும் விலைத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நெக்சா டீலர்ஷிப் மூலம் அதிகப்படியான வரவேற்பைப் பெற்ற காராக மாருதி சுசூகி பலேனோ உள்ளது.


நெக்சா டீலர்ஷிப்பின் கீழ் BS4 பெட்ரோல் மாடல் கார்கள் அதிகளவில் ஸ்டாக் இருப்பதால் இந்த தள்ளுபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: அறிமுகமான ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை - உற்சாகத்தில் MG ஹெக்டார்
First published: August 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading