ஒரே மாதத்தில் 36.3% வீழ்ச்சியைச் சந்தித்துள்ள மாருதி சுசூகி..!

பெருவாரியான வீழ்ச்சி ஆல்டோ மற்றும் வாகன்ஆர் கார் விற்பனையிலேயே ஏற்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: August 1, 2019, 2:41 PM IST
ஒரே மாதத்தில் 36.3% வீழ்ச்சியைச் சந்தித்துள்ள மாருதி சுசூகி..!
மாருதி சுசூகி. (Photo: Reuters)
Web Desk | news18
Updated: August 1, 2019, 2:41 PM IST
மாருதி சுசூகியின் உள்நாட்டு விற்பனை கடந்த ஜூலை மாதம் மட்டும் 36.3 சதவிகித விற்பனை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மாருதி சுசூகியின் 1,54,150 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால், 2019 ஜூலையில் விற்பனை வீழ்ந்து வெறும் 98,210 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன. உள்நாட்டு விற்பனை மட்டுமல்லாது ஏற்றுமதி விற்பனையுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஜூலையில் மாருதியின் 10,219 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்தாண்டு ஜூலையில் இந்த விற்பனை 9.4 சதவிகிதம் வீழ்ந்து 9,258 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மாருதி சுசூகி கார்களிலே செடான் ரகங்கள் தவிர குறிப்பாக சியஸ் கார்களைத் தவிர மற்ற அனைத்து ரகக் கார்களுமே விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.

பெருவாரியான வீழ்ச்சி ஆல்டோ மற்றும் வாகன்ஆர் கார் விற்பனையிலேயே ஏற்பட்டுள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் செலேரியோ, இக்னிஸ், சிஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் ஆகிய கார்களும் 22.7 சதவிகித வீழ்ச்சியைப் பெற்றுள்ளன.

மேலும் பார்க்க: அசாம் வெள்ள நிவாரணத்துக்காக ₹1 கோடி நிவாரண நிதியளித்த ஹூண்டாய்!
First published: August 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...