தொடர்ந்து எட்டாம் மாதமாக உற்பத்தியைக் குறைத்த மாருதி சுசூகி..!

மாருதி, டாடா மட்டுமல்லாது ஹூண்டாய், மஹிந்திரா, டொயோட்டா, ஹோண்டா ஆகிய நிறுவனங்களும் பெரும் சரிவைச் சந்துள்ளன.

தொடர்ந்து எட்டாம் மாதமாக உற்பத்தியைக் குறைத்த மாருதி சுசூகி..!
மாருதி சுசூகி
  • News18
  • Last Updated: October 10, 2019, 12:31 PM IST
  • Share this:
தொடர்ந்து எட்டாம் மாதமாக மாருதி சுசூகி நிறுவனம் தனது உற்பத்தியைக் குறைத்துக்கொண்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மாருதி சுசூகி நிறுவனம் 17.48 சதவிகிதம் அளவுக்கு உற்பத்தியைக் குறைத்துள்ளது. நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான மாருதி சுசூகி கடந்த செப்டம்பர் மாதம் 1,32,199 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்தது. இது 2018-ம் ஆண்டை விட குறைவானதாகும்.

இதேபோல், மாருதி சுசூகியின் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் உள்ள மினி மற்றும் காம்பேக்ட் ரக கார்களின் விற்பனையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2018 செப்டம்பரில் 1,15,576 கார்கள் விற்பனையான நிலையில் இந்தாண்டு செப்டம்பரில் 98,337 கார்கள் மட்டுமே மினி மற்றும் காம்பேக்ட் ரக கார்கள் விற்பனையாகி உள்ளன.


கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் மாருதி சுசூகி நிறுவனம் 33.99 சதவிகிதம் உற்பத்தியைக் குறைத்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் 63 சதவிகித உற்பத்தி சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மாருதி, டாடா மட்டுமல்லாது ஹூண்டாய், மஹிந்திரா, டொயோட்டா, ஹோண்டா ஆகிய நிறுவனங்களும் பெரும் சரிவைச் சந்துள்ளன.

மேலும் பார்க்க: செப்டம்பரில் மட்டும் 7,754 வாகனங்கள் விற்பனை- வீழ்ச்சியிலும் வாழும் கியா செல்டாஸ்

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்
First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading