நாட்டில் அதிக கார்களை விற்ற முதல் நிறுவனம்... வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த மாருதி சுசூகி!

கடந்த 8 ஆண்டுகளில் 1 கோடி கார்கள் என்பது அளப்பரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

நாட்டில் அதிக கார்களை விற்ற முதல் நிறுவனம்... வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்த மாருதி சுசூகி!
மாருதி சுசூகி
  • News18
  • Last Updated: December 3, 2019, 4:32 PM IST
  • Share this:
இந்தியாவிலேயே அதிகக் கார்களை விற்ற முதல் கார் உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது மாருதி சுசூகி நிறுவனம்.

பேசெஞ்சர் ரக கார்களில் இதுவரையில் சுமார் 2 கோடி கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் இத்தகையை சாதனையைச் செய்துள்ள முதல் நிறுவனம் என்ற அங்கீகாரத்தையும் மாருதி சுசூகி நிறுவனம் பெற்றுள்ளது.

மாருதி சுசூகி நிறுவனம் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்னர் 1983 டிசம்பரில் தனது முதல் காரை விற்பனை செய்தது. முதல் 29 ஆண்டுகளில் 1 கோடி கார்களை விற்பனை செய்த மாருதி சுசூகி கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் மேலும் 1 கோடி கார்களை விற்பனை செய்து 2 கோடி மைல்கல்லை எட்டியுள்ளது.


கடந்த 8 ஆண்டுகளில் 1 கோடி கார்கள் என்பது அளப்பரிய சாதனையாகக் கருதப்படுகிறது. இதுகுறித்து மாருதி சுசூகி இந்தியா சிஇஓ கெனிச்சி அயூகவா கூறுகையில், “இப்புதிய சாதனையால் நாங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறோம். எங்களது அத்தனை சப்ளையர்கள், டீலர்கள், பார்ட்னர்கள் என அனைவருக்கும் இது மிகப்பெரும் கவுரவம். நம்பிக்கை வைத்த அத்தனை வாடிக்கையாளர்களுக்கும் நன்றி சொல்கிறோம்” என்றுள்ளார்.

மேலும் பார்க்க: ’ரெட்ரோ’ தோற்றத்தில் அசத்தும் ராயல் என்ஃபீல்டு ‘தர்மா’..!
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்