டீசல் கார் விற்பனையை நிறுத்தும் மாருதி நிறுவனம் - என்ன காரணம்?

டீசல் கார் விற்பனையை நிறுத்தும் மாருதி நிறுவனம் - என்ன காரணம்?
  • News18 Tamil
  • Last Updated: February 26, 2020, 12:52 PM IST
  • Share this:
BS 6 தரத்தில் டீசல் கார்களை தயாரிக்க, அதிகம் செலவு செய்ய வேண்டும் என்பதால், டீசல் கார் விற்பனையை மாருதி நிறுவனம் நிறுத்த உள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் டீசல் கார் உற்பத்தி நிறுத்தப்படும் என்றும், டீசல் வாகனங்கள் விற்பனை செய்வதை முற்றிலும் நிறுத்துவதாகவும் மாருதி நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில், டீசல் கார்களுக்கு பதிலாக இயற்கை எரிவாயுவில் இயங்கும் கார்கள் மற்றும் எலெக்டிரிக் கார்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய மாருதி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. அத்தோடு, ஹைபிரிட் தொழில்நுட்பத்தை அதிக அளவில் தனது கார்களில் அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டீசல் வாகனங்கள் விற்பனை நிறுத்தப்படும்போது ஏற்படும் இழப்பை, ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் கீழ், கார்களை அறிமுகம் செய்து ஈடுசெய்ய திட்டமிட்டுள்ளது. ஹைபிரிட் கார்களில் கூடுதலாக 48 வோல்ட் லித்தியம் பேட்டரி பொறுத்தப்பட்டு இருக்கும். இந்த பேட்டரியை கொண்டு காரை ஆன் ஆப் செய்ய முடியும். இந்த வாகனங்களில் பொறுத்தப்பட்டுள்ள பேட்டரிகள், காரின் பிரேக்கை பிடிக்கும்போது சார்ஜ் ஆகக்கூடியவை. அது மட்டுமல்லாமல், கார்கள் அணைக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கும் நேரங்களில், பெட்ரோலுக்கு பதிலாக பேட்டரியில் இயங்க தொடங்கும், பின்னர் 16 கிலோமீட்டர் வேகத்தைக் கடக்கும்போது, கார் தானாக பெட்ரோலில் இயங்க தொடங்கும். இந்த வகை கார்களால், எரிவாயு பெருமளவு சேமிக்கப்படும். இது டீசல் காரின் இடத்தை நிறப்பும் என்றும் மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த வகையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32 கிலோ மீட்டர் பயணிக்கக் கூடிய Swift காரை மாருதி நிறுவனம் அண்மையில் காட்சிபடுத்தியது. ஏற்கனவே சில கார்களில் இந்த தொழில்நுட்ப உள்ள நிலையில், ஆண்டுக்கு 3 லட்சம் ஹைபிரிட் கார்கள் விற்பனையாகும் என மாருதி கணித்துள்ளது.

இந்தியாவில் மாருதி நிறுவனம் விற்பனை செய்யும் கார்களில், 9 சதவிதம் மட்டுமே இயற்கை எரிவாயுவில் இயங்கக் கூடியவை. டெல்லி, மும்பை , பூனே , அகமதாபாத் உள்ளிட்ட சில நகரங்களில் மட்டுமே இயற்கை எரிவாயு வாகனங்களின் பயன்பாடு உள்ளது.

டீசலில் ஓடும் டேக்சி கார்களும் வரும் ஏப்ரல் 1 முதல் விற்பனை செய்யப்படாது என்பதால், பழைய டீசல் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. டேக்சிகளுக்கும், பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் கார்களையே விற்பனை செய்ய மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Also see:

 
First published: February 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading