35 வயதினிலே! காலம் கடந்து நிற்கும் மாருதி 800

மாருதி 800 இந்தியாவில் அறிமுகமாகி 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

Web Desk | news18
Updated: December 15, 2018, 6:32 PM IST
35 வயதினிலே! காலம் கடந்து நிற்கும் மாருதி 800
மாருதி 800 இந்தியாவில் அறிமுகமாகி 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
Web Desk | news18
Updated: December 15, 2018, 6:32 PM IST
க்ளாசிக் ரகங்களோடு இணைந்துவிட்ட ‘மாருதி 800’ நேற்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளது.

1983-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதன்முறையாக இந்தியாவில் அறிமுகமாகிறது மாருதி 800. டெல்லியில் இந்திரா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட மாருதி 800 நேற்றோடு 35 வயதைக் கடந்துள்ளது. இந்தியாவில் அறிமுகமான முதல் ஜப்பான் கார் ஹர்பால் சிங் என்பவருக்கு முதன்முதலில் விற்பனை செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஐடியாவால் களம் இறக்கப்பட்டது தான் மாருதி. அம்பாசிடர், பத்மினி என இந்தியாவில் அன்றைய சொகுசு கார்களாக இருந்த பல கார்களையும் மாருதி 800 ஓரம் கட்டும் என்ற குறிக்கோளோடு களம் கண்டது 800. சிறிய உருவம், 796cc என்ஜின் என 4 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் வந்த மாருதி 800 அன்றைய காலகட்டத்தில் அமோக விற்பனையைப் பெற்றது.

முதன்முதலாகக் கார் வாங்க நினைக்கும் அத்தனை இந்தியர்களின் தேர்வாகவும் இருந்தது மாருதி 800. 1984-ம் ஆண்டும் மும்பையில் ஆன்-ரோடு விலையாக 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது மாருதி 800. அந்தக் காலத்தில் மாருதி 800 வைத்திருந்தவர்களின் வீடுகளுக்கு ஐ.டி ரெய்டு வருமாம். மாருதி 800 கார் எப்படி வாங்கினீர்கள்? அவ்வளவு வசதியா? என அக்கம்பக்கத்தில் கேள்விகள் குவியுமாம். அந்த அளவுக்கு வரவேற்பைப் பெற்றிருந்தது மாருதி 800.

அடுத்தடுத்து மாருதி பல ரகங்களை இறக்கினாலும், மாருதி 800-ன் உற்பத்தி நிறுத்தப்பட்டாலும் இன்றளவும் இதற்கான மவுசு குறைந்ததாகத் தெரியவில்லை.

மேலும் பார்க்க: 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
First published: December 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...