இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான எஸ்யூவி பட்டம்... தட்டிச்சென்ற மஹிந்திராவின் கார்!

கூடுதலாக, குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் 5-க்கு 4 மதிப்பெண் பெற்றுள்ளது மஹிந்திரா XUV300.

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான எஸ்யூவி பட்டம்... தட்டிச்சென்ற மஹிந்திராவின் கார்!
மஹிந்திரா XUV300
  • News18
  • Last Updated: January 23, 2020, 11:38 AM IST
  • Share this:
மஹிந்திராவின் XUV300 என்னும் காம்பேக்ட் எஸ்யூவி கார் இந்தியாவில் தயாரான மிகவும் பாதுகாப்பு வாய்ந்த எஸ்யூவி என்னும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

சர்வதேச NCAP பாதுகாப்பு சோதனையின் போது 5-க்கு 5 மதிப்பெண் பெற்று இந்தியாவில் தயாரான பாதுகாப்பான கார் எனப் பெயர் பெற்றுள்ளது மஹிந்திராவின் XUV300. இந்தியாவிலேயே NCAP சோதனையில் முழு மதிப்பெண் பெற்ற மூன்றாவது கார் என்ற பெருமையும் மஹிந்திரா XUV300-க்கு கிடைத்துள்ளது.

இதற்கு முன்னதாக டாடா நெக்ஸான் மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய இரண்டு கார்களும் முழு மதிப்பெண் பெற்ற கார்கள் ஆகும். கூடுதலாக, குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களில் 5-க்கு 4 மதிப்பெண் பெற்றுள்ளது மஹிந்திரா XUV300. இந்தியாவிலேயே குழந்தைகளுக்கான பாதுகாப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரே கார் இதுதான்.


மஹிந்திரா XUV300 காரில் 7 ஏர் பேக்குகள், நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக், முன்பக்க பார்க்கிங் சென்சார், ORVMs என அசத்தல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்தக் கார் விற்பனையில் உள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார்- சர்வதேச விருதை வென்ற டாடா-வின் கார் எது?
First published: January 23, 2020, 11:38 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading