8- 14 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திய மஹிந்திரா!

Mahindra | உள்நாட்டு உற்பத்தி மட்டுமல்லாது ஏற்றுமதியும் 8 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

8- 14 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திய மஹிந்திரா!
மஹிந்திரா&மஹிந்திரா
  • News18
  • Last Updated: August 12, 2019, 4:30 PM IST
  • Share this:
கடும் விற்பனை வீழ்ச்சியின் காரணமாக 8-14 நாட்களுக்கு உற்பத்தியை முற்றிலும் நிறுத்துவதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கடுமையான விற்பனை வீழ்ச்சியை சந்தித்து வருவதால் கார் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மஹிந்திரா மட்டுமல்லாது ஆட்டொமொபைல் துறையே முற்றிலும் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது.

கடந்த ஏப்ரல்- ஜூலை மாதங்களுக்கு இடையேயான காலகட்டத்தில் மஹிந்திராவின் உள்நாட்டு உற்பத்தி 8 சதவிகிதம் வீழ்ந்தது. கடந்த 2018 ஏப்ரல்- ஜூலை காலகட்டத்தில் 1,75,329 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த சூழலில் 2019 ஏப்ரல்- ஜூலை காலகட்டத்தில் 1,61,604 வாகனங்களே விற்பனை ஆகியுள்ளன. உள்நாட்டு உற்பத்தி மட்டுமல்லாது ஏற்றுமதியும் 8 சதவிகிதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.


கடந்த 2018 ஜூலையில் 44,605 மஹிந்திரா வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில் இந்த 2019 ஜூலையில் 37,474 வாகனங்களே விற்பனையாகி கடுமையான வீழ்ச்சியைப் பதிவு செய்தன. தற்போதைய சூழலில் தேவைக்கு கார்கள் விற்பனைக்கு உள்ளதால் புதிதாக எந்த உற்பத்தியும் மேற்கொள்ளப்படாது என்றே மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: அறிமுகமான ஒரே மாதத்தில் 1,508 வாகனங்கள் விற்பனை - உற்சாகத்தில் MG ஹெக்டார்
First published: August 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்