சென்னையில் சுற்றித்திரிந்த நியூ ஜென் மஹிந்திரா தார்!

கூடுதல் அகலமான வாகன அமைப்பு, புதிய முன்புறத் தோற்றம் என புதிய வடிவமைப்பை தார் பெற்றுள்ளது.

Web Desk | news18
Updated: January 25, 2019, 3:19 PM IST
சென்னையில் சுற்றித்திரிந்த நியூ ஜென் மஹிந்திரா தார்!
மஹிந்திரா தார்
Web Desk | news18
Updated: January 25, 2019, 3:19 PM IST
தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட நியூ ஜென் மஹிந்திரா ஜென் சென்னையில் டெஸ்ட் ட்ரைவிங்-ல் இருந்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

மஹிந்திராவின் அசத்தலான தார் மீண்டும் புத்தம்புது மொழிவுடன் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி அறிமுகம் ஆகிறது. புதிய XUV300 வாகனத்தின் புகைப்படங்கள் தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு ரிஜிஸ்ட்ரேஷன் உடன் இந்த தார் தற்போது நகர சாலைகளில் வலம் வந்துகொண்டிருக்கிறது.கூடுதல் அகலமான வாகன அமைப்பு, புதிய முன்புறத் தோற்றம் என புதிய வடிவமைப்பை தார் பெற்றுள்ளது. பழைய ஜீப் மாடல்களை அடிப்படையகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்புறம் வழக்கம்போல் தார்ப்பாய் போற்றிய அமைப்பு தான் கொண்டுள்ளது.

புதிய வாகனச் சட்டத்தின் அடிப்படையில் அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டூயல் ஏர்பேக்ஸ், SBR, ABS, வேகக்கட்டுப்பாடு எச்சரிக்கைக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. கூடுதலாக மாசு வெளியேற்றமும் விதியின் படி மேம்பட்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: குக்கர் சின்னம்... அனுதாபம் தேடுகிறாரா தினகரன்?
First published: January 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...