இனி இந்திய SUV அமெரிக்காவில் இறக்குமதி!- வழக்கை வென்ற மஹிந்திரா நிறுவனம்!

அமெரிக்காவில் மஹிந்திராவின் ராக்‌ஷர் வாகனம் இறக்குமதி ஆகலாம் என அமெரிக்க சர்வதேச வர்த்தக மையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இனி இந்திய SUV அமெரிக்காவில் இறக்குமதி!- வழக்கை வென்ற மஹிந்திரா நிறுவனம்!
அமெரிக்காவில் மஹிந்திராவின் ராக்‌ஷர் வாகனம் இறக்குமதி ஆகலாம் என அமெரிக்க சர்வதேச வர்த்தக மையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • News18
  • Last Updated: December 1, 2018, 9:10 PM IST
  • Share this:
மஹிந்திரா ராக்‌ஷர் வாகனம் அமெரிக்காவில் இறக்குமதி ஆவதற்கு தடை கோரிய வழக்கில் மஹிந்திரா நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய எஸ்யூவி கார் உற்பத்தியாளரான மஹிந்திராவின் ‘மஹிந்திரா ராக்‌ஷர்’ வாகனத்துக்குத் தடை கோரி ஃபியட் கிரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக மையத்தில் புகார் அளித்தது. புகாரில், ‘மஹிந்திராவின் ராக்‌ஷர் ‘ஜீப்’ ப்ராண்ட் வடிவமைப்பை கொண்டு வெளிவந்துள்ளது. அடுத்த ஒரு நிறுவனத்தின் வடிவமைப்பை பிரதி எடுப்பது சட்ட விரோதமாகும்’ என்று குற்றம் சுமத்தப்பட்டது.
அறிவுசார் சொத்து உரிமைகள் சட்டம் மீறப்பட்டதாகத் தொடுக்கப்பட்ட புகார் மீதான விசாரணையில் இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக கூடுதல் விசாரணை ஏதும் ஃபியட் கிரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் கேட்கக் கூடாது என்றும் அமெரிக்க சர்வதேச வர்த்தக மையம் உத்தரவிட்டுள்ளது.

மஹிந்திராவின் வடிவமைப்பு உரிமை சட்டத்துக்குப் புறம்பானதாக இல்லை என்றும் எந்த விதிமுறை மீறலும் இல்லை என்பதற்கான ஆதாரமும் மஹிந்திரா சமர்ப்பித்ததால் இனி அமெரிக்காவில் இந்திய நிறுவனமான மஹிந்திராவின் ராக்‌ஷர் இறக்குமதி ஆவதில் தடை இல்லை.

மேலும் பார்க்க: டிசம்பர் 5 - ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? மருத்துவர் விளக்கம்
First published: December 1, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்