4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..!

இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கோடா தனது ரேபிட் ரைடருக்கு நான்கு ஆண்டு வாரண்டி சேவையை வழங்குகிறது.

Web Desk | news18
Updated: July 16, 2019, 5:36 PM IST
4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..!
ஸ்கோடா ரேபிட் ரைடர். (Image source: Rapid)
Web Desk | news18
Updated: July 16, 2019, 5:36 PM IST
இந்தியாவில் 6.99 லட்சம் ரூபாய்க்கு ஸ்கோடாவின் ரேபிட் ரைடர் வெளியாகி உள்ளது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் ரேபிட் ரைடர் கார்களை குறைந்த எண்ணிக்கையிலேயே வெளியிட்டுள்ளது. கேண்டி ஒயிட் மற்றும் கார்பன் ஸ்டீல் ஆகிய இரண்டு நிறங்களில் ரேபிட் விற்பனைக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து டீலர்களிடமும் நேரடி விற்பனை நடைபெறுகிறது.

புதிய ஸ்கோடா அறிமுகம் குறித்து விற்பனை மற்றும் சேவைப் பிரிவு இயக்குநர் ஜாக் ஹோலிஸ் கூறுகையில், “புதிய ரேபிட் ரைடர் ஸ்கோடா பிராண்டின் தரத்தை நிலைநிறுத்தும் வகையிலான டிசைன், உள்கட்டமைப்பு மற்றும் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்களுடன் அதிரடியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என்றார்.


புதிய ரேபிட் மாடலில் சிறப்பு அம்சமாக டூயல் ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதுவரையில் வெளிவந்த ஸ்கோடா தயாரிப்புகளிலேயே அதிகப்பட்ச பாதுகாப்பு அம்சங்களுடன் ரேபிட் ரைடர் உள்ளது. இதனுடன், பார்க்கிங் சென்சார், க்ளேர் அடிக்காத பக்கவாட்டுக் கண்ணாடி, டைமர் உடனான விண்ட்ஷீல்டு, உயரத்துக்கு ஏற்ப மாற்றப்படக் கூடிய சீட் பெல்ட் என அசத்துகிறது ஸ்கோடா ரேபிட்.

1.6 லிட்டர் மல்டி-பாயிண்ட் பெட்ரோல் பவர் என்ஜின் கொண்ட ஸ்கோடா ரேபிட் ரைடரின் திறன் 153Nm டாக் வெளியீட்டுடன் லிட்டருக்கு 15.41 கி.மீ மைலேஜ் தருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக ஸ்கோடா தனது ரேபிட் ரைடருக்கு நான்கு ஆண்டு வாரண்டி, 4 ஆண்டுக்கான சாலையோர உதவி மற்றும் 4 ஆண்டுக்கான பராமரிப்பு சேவையை வழங்குகிறது.

மேலும் பார்க்க: வாகனங்களுக்கு இலவச மழைக்கால பரிசோதனை - டாடா மோட்டார்ஸ் சலுகை
First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...