2019-ல் இந்தியாவில் லம்போர்கினி விற்பனை மும்மடங்கு உயரும்!

புதிதாக லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரை லம்போர்கினி இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Web Desk | news18
Updated: January 2, 2019, 11:12 AM IST
2019-ல் இந்தியாவில் லம்போர்கினி விற்பனை மும்மடங்கு உயரும்!
லம்போர்கினி உரூஸ் (Photo: Lamborghini India)
Web Desk | news18
Updated: January 2, 2019, 11:12 AM IST
2019-ம் ஆண்டு இந்தியாவில் புதிதாக அறிமுகமாகியுள்ள லம்போர்கினி எஸ்யூவி மூன்று மடங்கு விற்பனைச் சாதனையை எட்டும் எனக் கூறப்படுகிறது.

இத்தாலியின் சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் மாடலான லம்போர்கினி தனது ஓராண்டு கால கடுமையான முயற்சியால் புத்தாண்டில் தனது விற்பனையை மும்மடங்கு அதிகரித்துச் சாதனை புரியும் என லம்போர்கினியின் இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி ஆகிய சொகுசு கார்களுக்குப் போட்டியாக சுமார் 3 கோடி ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு இந்தியாவில் களம் இறங்கியுள்ளது லம்போர்கினி உருஸ் எஸ்யூவி. இதுகுறித்து லம்போர்கினி இந்தியத் தலைவர் சரத் அகர்வால் கூறுகையில், “இந்திய காலநிலை மற்றும் சூழலுக்கு ஏற்ப இந்தியாவுக்கான பிரத்யேக லம்போர்கினியை உருவாக்கி உள்ளோம். இதற்கான கடுமையான முயற்சிக்கு நிச்சயமாக இந்தியாவில் ஆதரவு கிடைக்கும். சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் ரகங்களின் ராஜாவாக இந்திய லம்போர்க்கினி இருக்கும். இந்தியாவின் வாங்கும் திறன் அதிகம் என்பதால் லம்போர்கினி இந்தியாவில் வெற்றிபெறும்” என்றார்.

லம்போர்கினி கடந்த 2018 ஜனவரி மாதம் ஸ்போர்ட்ஸ் கார்களாக ஹுராகன் மற்றும் அவெண்டேட்டர் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு மொத்தம் 26 லம்போர்கினி கார்கள் இந்தியாவில் விற்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தாண்டு அறிமுகமாகியுள்ள உருஸ் எஸ்யூவி மும்மடங்கு விற்பனையைப் பெறும் என லம்போர்கினி நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: திகில் கிளப்பும் திருவாரூர் இடைத்தேர்தல்
First published: January 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...