2019-ம் ஆண்டிலேயே வெளிவருகிறதா லம்போர்கினி ஹுராகன்?

வழக்கமான லம்போர்கினி ஆக இல்லாமல் மிரட்டலான ஃபேஸ்லிஃப்ட் தோற்றத்துடன் புதிய ஹுராகன் உள்ளது.

Web Desk | news18
Updated: January 5, 2019, 2:36 PM IST
2019-ம் ஆண்டிலேயே வெளிவருகிறதா லம்போர்கினி ஹுராகன்?
லம்போர்கினி ஹுராகன்
Web Desk | news18
Updated: January 5, 2019, 2:36 PM IST
2020-ம் ஆண்டு ஃபேஸ்லிஃப்ட் மாடல் அமைப்புடன் இந்தாண்டிலேயே இந்தியாவில் லம்போர்கினி ஹுராகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வமான வெளியிடுதல் குறித்தான அறிவிப்புக்கு முன்னரே லம்போர்கினியின் புது மாடல் டீசர் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. 2020-ம் ஆண்டு போல் வெளியாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 2019-ம் ஆண்டிலேயே ஹுராகன் வெளியாவது டீசர் மூலம் தெளிவாகி உள்ளது.

முற்றிலும் மாற்றப்பட்டப் புதிய தோற்றத்துடன் தற்போது டெஸ்டிங் பணி நடந்து வருகிறது. டீசர் மூலம் மட்டுமே ஹுராகனின் வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் குறித்து எந்த முடிவுக்கும் வர முடியாது. ஆனால், வழக்கமான லம்போர்கினி ஆக இல்லாமல் மிரட்டலான ஃபேஸ்லிஃப்ட் தோற்றத்துடன் புதிய ஹுராகன் உள்ளது. லம்போர்கினியின் முன்னாள் ஹுராகன் ஃபெர்ஃவோமன்டே-வின் வடிவையே புதிய ஹூரகனும் பெற்றுள்ளது போல் தெரிகிறது.

2020-க்கான அப்டேட் என்பதால் செயல்பாடுகளும் அப்டேட் செய்யப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5.2 லிட்டர் கொள்ளவு கொண்ட V10 என்ஜின் ஹுராகனில் பொருத்தப்பட்டுள்ளது.

இதர லம்போர்கினிகளை விட புதிய ஹுராகனின் கேபின் கூட மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முழுத் தகவல்களுக்கு லம்போர்கினியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரையில் காத்திருக்கத் தான் வேண்டும்.

மேலும் பார்க்க: டிடிவி தினகரனை தான் மக்கள் அதிமுகவாக பார்க்கிறார்களா?
First published: January 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...