ரூ.3.73 கோடியில் இந்தியாவில் கால்பதித்த லம்போர்க்கினி ஹுராகன்!

புதிய தோற்றம், அதிகத் திறன் கொண்ட என்ஜின், மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக்ஸ் என அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமாகி உள்ளது லம்போர்க்கினியின் ஹுராகன் EVO.

Web Desk | news18
Updated: February 8, 2019, 12:06 PM IST
ரூ.3.73 கோடியில் இந்தியாவில் கால்பதித்த லம்போர்க்கினி ஹுராகன்!
லம்போர்க்கினி ஹுராகன்
Web Desk | news18
Updated: February 8, 2019, 12:06 PM IST
அதிகத் திறன் கொண்ட புதிய ஹுராகன் EVO சொகுசுக் காரை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது லம்போர்க்கினி நிறுவனம்

புதிய தோற்றம், அதிகத் திறன் கொண்ட என்ஜின், மேம்படுத்தப்பட்ட ஏரோடைனமிக்ஸ் என அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமாகி உள்ளது லம்போர்க்கினியின் ஹுராகன் EVO. முன் மற்றும் பின் பக்கங்களில் கூடுதல் பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5.2 லிட்டர் V10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

640PS திறன் கொண்ட என்ஜின், 600 Nm டார்க் வெளியீடு கொண்டுள்ளது ஹுராகன். ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் கொண்ட 7 ஸ்பீடு கியர் பாக்ஸ் கூடுதல் ப்ளஸ் ஆகப் பார்க்கப்படுகிறது. வேகத்தைப் பொருத்தமட்டில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் ஹுராகன் கடந்துவிடுகிறது. அதாவது, மணிக்கு ஹுராகனின் வேகம் 32.5 கி.மீ ஆக உள்ளது.


2019 வெர்ஷனில் பெரும் மாற்றமே உள்புறத் தோற்றத்தில்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, மேம்படுத்தப்பட்ட வாய்ஸ் கமாண்டு சிஸ்டம் கொண்ட 8.4 இன்ச் கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: அதிமுக - திமுக உடன் சேராதீர்கள்… அன்புமணி, விஜயகாந்த்துக்கு தடை போடுகிறாரா கமல்?
First published: February 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...