8.5 கோடி ரூபாய்க்கு அறிமுகமான லம்போர்கினி அவன்டேடர்!

V12 என்ஜின் ரக சொகுசு கார்கள் வரிசையில் மிகவும் வலிமை மிகுந்தது அவன்டேட்டர் SVJ.

Web Desk | news18
Updated: January 24, 2019, 11:44 AM IST
8.5 கோடி ரூபாய்க்கு அறிமுகமான லம்போர்கினி அவன்டேடர்!
லம்போர்க்கினி
Web Desk | news18
Updated: January 24, 2019, 11:44 AM IST
லம்போர்க்கினி தனது புதிய அவன்டேட்டர் SVJ சொகுசுக் காரை இந்தியாவில் களம் இறக்கியுள்ளது.

இதுவரையில் விலை குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்ற போதிலும், இந்தியாவில் 8.5 கோடி ரூபாய் வரையில் விலை நிர்ணயிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.கடந்த 2018-ம் ஆண்டு துவக்கத்தில் சர்வதேச அளவில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கார் திருவிழாவில் இந்த அவன்டேட்டர் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. V12 என்ஜின் ரக சொகுசு கார்கள் வரிசையில் மிகவும் வலிமை மிகுந்தது அவன்டேட்டர் SVJ என லம்போர்க்கினி பெருமை தெரிவித்துள்ளது.

8,500 rpm பவர், 720 Nm டார்க் வெளியீடு கொண்டுள்ளது. மணிக்கு 100 கிமீ வேகத்தை 2.8 விநாடிகளிலும் மணிக்கு 200 கிமீ வரையிலான வேகத்தை 8.6 விநாடிகளிலும் கடந்துவிடும் திறன் கொண்டுள்ளது அவன்டேட்டர் SVJ. அதிகப்பட்சமான மணிக்கு 350 கிமீ வரையிலும் சீறும் திறனும் உள்ளது.Strada, Sport மற்றும் Corsa என்ற மூன்று ரக ட்ரைவிங் மோட் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வாகனத்தை கஸ்டமைஸ் செய்துகொள்வதற்கு வசதியாக EGO கொடுக்கப்பட்டுள்ளது. சூப்பர்கார் விரும்பிகளுக்கு இந்த கார் மிகவும் பிடித்தமானதாக இருக்கும் என லம்போர்க்கினி நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: VERY VERY BAD பாடலில் நல்லகண்ணு, பாலபாரதி, திருமுருகன் காந்தி!
First published: January 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...