ஜூலை 31-ம் தேதி முதல் விற்பனையில் கியா செல்டாஸ்..!

ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என மூன்று விதமான அனுபவங்களை அளிக்கத் தயாராகி உள்ளது செல்டாஸ்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 2:38 PM IST
ஜூலை 31-ம் தேதி முதல் விற்பனையில் கியா செல்டாஸ்..!
கியா செல்டாஸ்
Web Desk | news18
Updated: July 26, 2019, 2:38 PM IST
கியா மோட்டார்ஸின் செல்டாஸ் கார் வருகிற ஜூலை 31-ம் தேதி ஆந்திரா தொழிற்சாலையிலிருந்து விற்பனைக்கு வருகிறது.

தென் கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ், இந்தியாவில் உற்பத்தி செய்த முதல் காராக கியா செல்டாஸ் உள்ளது. தொடர்ந்து ஆந்திராவின் அனந்தபூர் தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் செல்டாஸ் கார்கள் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதமே செல்டாஸ் உற்பத்திக்கான செயல்திட்டம் ஆரம்பித்தது. ஆறு மாதத்திலேயே அந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது பெருமை அளிப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 16-ம் தேதிதான் செல்டாஸ்-க்கான முன்பதிவு தொடங்கியது. அதற்குள் 6 ஆயிரம் பேர் செல்டாஸ் காருக்கு முன்பதிவு செய்துள்ளனர்.


ஆண்டுக்கு 3 லட்சம் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக கியா மோட்டார்ஸ் தலைவர் கூகின் ஷிம் தெரிவித்தார். செல்டாஸ் இரண்டு ரகங்களாக வெளிவருகிறது. கியா ரசிகர்களுக்காக ஜிடி லைன், குடும்பங்களைக் கவிர டெக் லைன் என இரண்டு ரகங்கள் வருகின்றன.

1.5 பெட்ரோல், 1.5 டீசல் மற்றும் 1.5 டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று ரகங்களின் கீழ் செல்டாஸ் வருகிறது. என்ஜினுடன் 3 ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 7DCT, IVT மற்றும் 6 AT ஆகிய மூன்று ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என மூன்று விதமான அனுபவங்களை அளிக்கத் தயாராகி உள்ளது செல்டாஸ்.

Loading...

மேலும் பார்க்க: ஏலத்துக்கு வரும் ’ராம்போ’ சில்வஸ்டர் ஸ்டலோனின் ஃபோர்டு முஸ்தாங் கார்..!
First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...