ஒரே நாளில் சுமார் 6000 பேர் முன்பதிவு- சாதனை படைத்த கியா செல்டாஸ் கார்!

செல்டாஸ் காருக்கு 25ஆயிரம் ரூபாய் கொடுத்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.

Web Desk | news18
Updated: July 17, 2019, 8:30 PM IST
ஒரே நாளில் சுமார் 6000 பேர் முன்பதிவு- சாதனை படைத்த கியா செல்டாஸ் கார்!
கியா செல்டாஸ். (Image source: Kia)
Web Desk | news18
Updated: July 17, 2019, 8:30 PM IST
கியா மோட்டார்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ள செல்டாஸ் எஸ்யூவி காரின் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 6,046 பேர் அட்வான்ஸ் செலுத்தி பதிவு செய்துள்ளனர்.

வருகிற ஆகஸ்ட் மாதம் கியா மோட்டார்ஸ் செல்டாஸ் எஸ்யூவி காரை அறிமுகம் செய்கிறது. நாடு முழுவதும் உள்ள 160 நகரங்களின் டீலர்ஷிப் இடங்களில் நேற்று முன்பதிவு தொடங்கியது. முதல் நாளில் 6,046 பேர் புக்கிங் செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாக 1,628 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கியா மோட்டார்ஸ் துணைத்தலைவர் மனோகர் பட் கூறுகையில், “நாடு முழுவதுமிருந்து கிடைத்த பெரும் ஆதரவு எங்களைப் பூரிப்படையச் செய்துள்ளது. இது கியா மோட்டார்ஸின் உழைப்புக்குக் கிடைத்த வெகுமதி. எங்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது. இந்திய கார் சந்தைக்குத் தொடர்ந்து உலகத்தர வாகனங்களை அறிமுகம் செய்வோம்” என்றார்.


1.5 பெட்ரோல், 1.5 டீசல் மற்றும் 1.5 டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று ரகங்களின் கீழ் செல்டாஸ் வருகிறது. என்ஜினுடன் 3 ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 7DCT, IVT மற்றும் 6 AT ஆகிய மூன்று ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள அனந்தபூர் தொழிற்சாலையில் 3 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 22-ம் தேதி வெளிவரும் செல்டாஸ் காருக்கு 25ஆயிரம் ரூபாய் கொடுத்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் பார்க்க: 4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..!
First published: July 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...