Kia Seltos SUV Launched in India | விற்பனைக்கு வந்தது கியா செல்டாஸ்

Kia Seltos SUV | செல்டோஸ் காரானது ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், நிஸான் கிக்ஸ், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kia Seltos SUV Launched in India | விற்பனைக்கு வந்தது கியா செல்டாஸ்
கியா செல்டாஸ்
  • News18
  • Last Updated: August 22, 2019, 2:07 PM IST
  • Share this:
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த கியா செல்டாஸ் கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கியா மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக செல்டோஸ் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய கியா செல்டோஸ் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் என்ற இரண்டு விதமான மாடல்களில் வந்துள்ளது.

1.5 பெட்ரோல், 1.5 டீசல் மற்றும் 1.5 டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று ரகங்களின் கீழ் செல்டாஸ் வருகிறது. என்ஜினுடன் 3 ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 7DCT, IVT மற்றும் 6 AT ஆகிய மூன்று ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஏற்கனவே, பலர் முன்பதிவு செய்திருந்த நிலையில், கார் இன்று விற்பனைக்கு வந்தது. Rs 9.69  லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

செல்டோஸ் எஸ்யூவியின் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் இணைக்கப்பட்ட மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16.4 கிமீ மைலேஜ்-ம், ஆட்டோமேட்டிக் மாடல் 16.3 கிமீ மைலேஜ்-ம் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 20.8 கிமீ மைலேஜ்-ம், ஆட்டோமேட்டிக் மாடல் 17.8 கிமீ மைலேஜ்-ம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 16.1 கிமீ மைலேஜ்-ம், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 16.2 கிமீ மைலேஜ்-ம் வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

புதிய கியா செல்டோஸ் காரில் 360 டிகிரி கேமரா, முன்புற, பக்கவாட்டு ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஹில் ஹோல்டு அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், வெஹிக்கிள் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

செல்டோஸ் கார் ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர், நிஸான் கிக்ஸ், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களுக்கு கடும் போட்டியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading