செப்டம்பரில் மட்டும் 7,754 வாகனங்கள் விற்பனை- வீழ்ச்சியிலும் வாழும் கியா செல்டாஸ்

செப்டம்பரில் மட்டும் 7,754 வாகனங்கள் விற்பனை- வீழ்ச்சியிலும் வாழும் கியா செல்டாஸ்
கியா செல்டாஸ்
  • News18
  • Last Updated: October 4, 2019, 3:00 PM IST
  • Share this:
இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வரும் சூழலில் கியா செல்டாஸ் கார் விற்பனையில் பெரிய சாதனையையே நிகழ்த்தியுள்ளது.

விழாக்கால சலுகைகள் பல அறிவிக்கப்பட்டாலும் கார் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் பலத்த சரிவைச் சந்தித்து வருகின்றன. ஆனால், அறிமுகம் செய்த ஒரே மாதத்தில் அதிகப்படியான விற்பனைச் சாதனையை கியா செல்டாஸ் செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் கியா செல்டாஸ் எஸ்யூவி 7,754 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

9.69 லட்சம் ரூபாய்க்கு அறிமுகமான செல்டாஸ் கியாவின் முதல் கனெக்டட் கார் ஆகும். தொழில்நுட்பத்திலும் பாதுகாப்பு அம்சங்களிலும் இந்தியாவின் முன்னணி கார் என்ற பெருமையை செல்டாஸ் எட்டியுள்ளது. கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு UVO கனெக்‌ஷன் இலவசம். UVO கனெக்‌ஷன் மூலம் நேவிகேஷன், பாதுகாப்பு, வாகன மேலாண்மை, ரிமோட் கன்ட்ரோல் மற்றும் இதர செளகரியங்களைக் கையாள முடியும்.


AI வாய்ஸ் கமாண்ட், வாகனம் திருடப்பட்டால் ட்ராக் செய்யும் அம்சம், வாகன இயக்கத்தை முடக்குதல், SOS உதவி, ரிமோட் உதவுயுடன் என்ஜின் இயக்கம், காற்று சுத்திகரிப்பு, பாதுகாப்பு அலர்ட் எனப் பல சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1.5 பெட்ரோல், 1.5 டீசல், 1.4 டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று என்ஜின் அம்சங்கள் உள்ளன. 6 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: கடுமையான வீழ்ச்சியில் மஹிந்திரா நிறுவனம்... விழாக்காலம் காப்பாற்றும் என நம்பிக்கை...!

தொடர்விடுமுறை: சிறப்பு பேருந்துகள் இயக்கம்...
First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading