மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களை வீழ்த்திய கியா... இந்தியாவின் அதிக விற்பனையான எஸ்யூவி பட்டம்!

செல்டாஸ் காருக்கான முன்பதிவு நடந்தபோது முதல் நாளிலேயே 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தது பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது.

மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களை வீழ்த்திய கியா... இந்தியாவின் அதிக விற்பனையான எஸ்யூவி பட்டம்!
கியா செல்டாஸ்
  • News18
  • Last Updated: February 24, 2020, 6:00 PM IST
  • Share this:
இந்தியாவில் அதிகம் விற்பனையான எஸ்யூவி கார்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது கியா செல்டாஸ்.

தென் கொரிய கார் நிறுவனமான கியா, இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களான மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான கியா செல்டாஸ் இதுவரையில் 60 ஆயிரம் வாகனங்களுக்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது.

கியா செல்டாஸ் காருக்கான முன்பதிவு நடந்தபோது முதல் நாளிலேயே 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்தது பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. முதலிடத்தில் சமீபத்தில் நிலைத்திருந்த மாருதி சுசூகியின் விதாரா ப்ரெஸ்சா காரை செல்டாஸ் வீழ்த்தியுள்ளது.


மொத்தம் 13 நிறங்களில் 24 ரகங்களில் 9.89 லட்சம் ரூபாய்க்கு விற்பனையில் உள்ளது. செல்டாஸ், விதாரா ப்ரெஸ்சா ஆகிய கார்களுக்குப் போட்டியாக அடுத்தடுத்த இடங்களில் ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டார், நிசான் கிக்ஸ், ஹோண்டா BR-V மற்றும் மஹிந்திரா XUV300 ஆகிய கார்கள் உள்ளன.

மேலும் பார்க்க: பெரிய கார்களைப் பயன்படுத்த விரும்பும் இந்தியர்கள்- மஹிந்திரா தலைவர் வேதனை..!
First published: February 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading