ஆகஸ்ட்டில் வெளியாகும் கியா செல்டாஸ்-க்கு இன்று முதல் முன்பதிவு!

கடந்த 2018-ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா செல்டாஸ் வருகிற ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வருகிறது.

ஆகஸ்ட்டில் வெளியாகும் கியா செல்டாஸ்-க்கு இன்று முதல் முன்பதிவு!
கியா செல்டாஸ். (Photo: Arjit Garg/News18.com)
  • News18
  • Last Updated: July 16, 2019, 6:20 PM IST
  • Share this:
இந்தியாவில் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள கியா செல்டாஸ் காருக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது.

கியா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் செல்டாஸ் காருக்கான முன்பதிவு இன்று நாடு முழுவதும் உள்ள 26 டீலர்ஷிப் இடங்களில் நடைபெறத் தொடங்கியுள்ளது. செல்டாஸ் இரண்டு ரகமாக வெளியிடப்படும். ஜிடி லைன் ரகம் கியா ரசிகர்களுக்கும் டெக் லைன் ரகம் குடும்பங்களைக் கவரும் விதமாகவும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

1.5 பெட்ரோல், 1.5 டீசல் மற்றும் 1.5 டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று ரகங்களின் கீழ் செல்டாஸ் வருகிறது. என்ஜினுடன் 3 ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 7DCT, IVT மற்றும் 6 AT ஆகிய மூன்று ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஸ்போர்ட்ஸ், நார்மல் மற்றும் ஈகோ என மூன்று விதமான அனுபவங்களை அளிக்கத் தயாராகி உள்ளது செல்டாஸ். புதிய மோட்டார் வாகனச் சட்டத்துக்கு ஏற்ப பாதுகாப்பு அம்சங்கள் புதிய தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிறப்பம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா செல்டாஸ் வருகிற ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வருகிறது.

மேலும் பார்க்க: 4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..!
First published: July 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்