ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை முறியடித்த கியா செல்டாஸ்..!

போட்டியாளர்களை விட பட்ஜெட் விலையில் 9.96 லட்சம் ரூபாய்க்கு செல்டாஸ் விற்பனையாவது கூடுதல் பலமாக உள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை முறியடித்த கியா செல்டாஸ்..!
கியா செல்டாஸ்
  • News18
  • Last Updated: September 5, 2019, 2:50 PM IST
  • Share this:
இந்தியாவில் ஹூண்டாயின் சாதனையை இம்முறை கியா மோட்டார்ஸ் முறியடித்துள்ளது.

2019 ஆகஸ்ட் மாதத்தில் ஹூண்டாய் க்ரெட்டாவின் விற்பனை எண்ணிக்கையைவிட கியா மோட்டார்ஸின் செல்டாஸ் கார் அதிகம் விற்பனை ஆகியுள்ளது. கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸின் செல்டாஸ் கார் கொரியாவைவிட இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

செல்டாஸ் எஸ்யூவிக்கான முன்பதிவை கடந்த ஜூலை 16-ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி வரையில் 23 ஆயிரம் பேர் செல்டாஸ் காரை முன்பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கியா செல்டாஸ் 6,236 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.


இரண்டாம் இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா 6,001 வாகனங்களும் எம்ஜி ஹெக்டார் 2,000 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளன. போட்டியாளர்களை விட பட்ஜெட் விலையில் 9.96 லட்சம் ரூபாய்க்கு செல்டாஸ் விற்பனையாவது கூடுதல் பலமாக உள்ளது.

1.5 பெட்ரோல், 1.5 டீசல் மற்றும் 1.5 டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று ரகங்களின் கீழ் செல்டாஸ் வருகிறது. என்ஜினுடன் 3 ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 7DCT, IVT மற்றும் 6 AT ஆகிய மூன்று ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: அதிக செலவு ஆகிறது... முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிடுவதில் மாருதி சுசூகி சுணக்கம்!கோவையில் மூடப்படும் தொழிற்சாலைகளால் வேலையிழப்பு!
First published: September 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading