ஒரே மாதத்தில் 6,200 கார்கள்... விற்பனையில் அடித்து நொறுக்கிய கியா செல்டாஸ்..!

பட்ஜெட் விலையில் 9.96 லட்சம் ரூபாய்க்கு செல்டாஸ் விற்பனையாவது கூடுதல் பலமாக உள்ளது.

Web Desk | news18
Updated: September 2, 2019, 3:07 PM IST
ஒரே மாதத்தில் 6,200 கார்கள்... விற்பனையில் அடித்து நொறுக்கிய கியா செல்டாஸ்..!
கியா செல்டாஸ்
Web Desk | news18
Updated: September 2, 2019, 3:07 PM IST
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கியா மோட்டார்ஸ் 6,200 செல்டாஸ் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து பெரும் சாதனை படைத்துள்ளது.

கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் செல்டாஸ் எஸ்யூவிக்கான முன்பதிவை கடந்த ஜூலை 16-ம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்து கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி வரையில் 23 ஆயிரம் பேர் செல்டாஸ் காரை முன்பதிவு செய்துள்ளனர்.

விற்பனையில் சூடுகாட்டிய எம்ஜி ஹெக்டார் காரைவிட இந்த செல்டாஸின் விற்பனை தற்போது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது. போட்டியாளர்களை விட பட்ஜெட் விலையில் 9.96 லட்சம் ரூபாய்க்கு செல்டாஸ் விற்பனையாவது கூடுதல் பலமாக உள்ளது.


1.5 பெட்ரோல், 1.5 டீசல் மற்றும் 1.5 டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று ரகங்களின் கீழ் செல்டாஸ் வருகிறது. என்ஜினுடன் 3 ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 7DCT, IVT மற்றும் 6 AT ஆகிய மூன்று ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: அதே சொகுசுடன் நவீன வடிவமைப்புகளுடன் மீண்டும் வருகிறது அம்பாஸடர்!

இஸ்ரோவின் சரித்திர சாதனைப்பயணத்தில் இன்று மைல்கல்

Loading...

First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...