கியா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் செல்டோஸ் எஸ்யூவி!

இந்தியாவில் அனந்தபூர் மற்றும் ஆந்திராவில் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கியா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் செல்டோஸ் எஸ்யூவி!
கியா செல்டோஸ் (Photo: Kia Motors India)
  • News18
  • Last Updated: June 4, 2019, 4:57 PM IST
  • Share this:
கியா மோட்டார்ஸ் தனது அடுத்த வெளியீடாக கியா செல்டோஸ் என்னும் எஸ்யூவி ரக காரை அறிமுகம் செய்துள்ளது.

SP2i-ன் அடிப்படையில் உருவாகியுள்ள கியா செல்டோஸ் மாடல் கடந்த 2018-ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மோட்டார் சந்தையில் நுழையும் கியாவின் முதல் வெளியீடாக செல்டோஸ் உள்ளது.

செல்டோஸ் கியா மோட்டார்ஸுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிரேக்க கதைகளில் வரும் ஹெர்குலஸின் மகன் செல்டாஸின் பெயரின் அடிப்படையிலேயே கியா தனது புதிய எஸ்யூவி காருக்கு ‘செல்டோஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.


சொகுசான எஸ்யூவி ரகமாக செல்டோஸ் இருக்கும் என்றும் இந்தியாவில் அனந்தபூர் மற்றும் ஆந்திராவில் கியா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: இந்தியாவில் அறிமுகமாகிறதா டெஸ்லா...? 
First published: June 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்