தயாரிப்புப் பணியில் J-Pace எஸ்யூவி... உறுதிபடுத்திய ஜாகுவார்..!

ஜாகுவாரின் அடையாளுங்களுள் ஒன்றாக இருக்கும் செடான், XJ ஆகிய கார்களை எலெக்ட்ரிக் கார்களாக ஜாகுவார் மாற்ற உள்ளது.

தயாரிப்புப் பணியில் J-Pace எஸ்யூவி... உறுதிபடுத்திய ஜாகுவார்..!
ஜாகுவார்.
  • News18
  • Last Updated: July 25, 2019, 8:25 PM IST
  • Share this:
ஜாகுவாரின் புதிய J-Pace எஸ்யூவி தயாரிப்புப் பணியில் இருப்பதாகவும் ஒரு சிலருக்கே அந்தக் காரின் தோற்றத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் ஜாகுவார் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஜாகுவார் நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை நோக்கி அடியெடுத்து வைத்திருப்பதாக முன்னரே அறிவித்திருந்தது. வருகிற 2020-ம் ஆண்டு முதல் முற்றிலும் எலெக்ட்ரிக் மயமாக மாறப்போவதை ஜாகுவார் உறுதிப்படுத்தியுள்ளது. வரிசையாக என்னென்ன எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகும் என்றும் அறிவிக்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக, I-Pace குறித்த அறிவிப்பு வெளியாகிவிட்டது. தற்போது விற்பனையில் இருக்கும் XE மற்றும் F-Type ஆகிய கார்களுக்கு மாற்றுகார்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன. ஜாகுவாரின் அடையாளுங்களுள் ஒன்றாக இருக்கும் செடான், XJ ஆகிய கார்களை எலெக்ட்ரிக் கார்களாக ஜாகுவார் மாற்ற உள்ளது.


நியூஜென் ஜாகுவார் XJ கார் சில் தோற்ற மாற்றங்களுடன் வெளிவரும் எனக் கூறப்படுகிறது. அதாவது, செடான் ரகத்தின் வழக்கமான நான்கு கதவுகள் கொண்ட காராக இல்லாமல் ஐந்து கதவுகள் கொண்ட செடான் ஆக XJ வர உள்ளது. லே-அவுட் ஒப்புதல் பெறப்பட்டு தற்போது இதற்கான உற்பத்தியும் தொடங்கியுள்ளது.

மேலும் பார்க்க: புதிய எலெக்ட்ரிக் சைக்கிள்களை அறிமுகம் செய்யும் ஹீரோ சைக்கிள்ஸ்..!
First published: July 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading