இந்தியாவில் பாதுகாப்பான டாப் 10 கார்கள்... பிரபல ஆய்வில் முதலிடம் பிடித்த கார் எது?

இந்தியாவில் ஓடக் கூடிய கார்களில் மிகவும் பாதுகாப்பான பத்து கார்களை சர்வதேச கார் பாதுகாப்பு தணிக்கை நிறுவனம் ஒன்று பட்டியலிட்டுள்ளது

இந்தியாவில் பாதுகாப்பான டாப் 10 கார்கள்... பிரபல ஆய்வில் முதலிடம் பிடித்த கார் எது?
Mahindra XUV 300
  • Share this:
சர்வதேச கார் பாதுகாப்பு தணிக்கை நிறுவனமான குளோபல் என்.சி.ஏ.பி. இந்தியாவில் தயாரிக்கப்பட்டதிலேயே மிகவும் பாதுகாப்பான 10 கார்களை பட்டியலிட்டுள்ளது. 38 வகையான கார்களின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி பல வகையில் சோதித்த பின் இந்த நிறுவனம் அறிவித்துள்ள சிறந்த கார்களில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவன கார்களே அதிகம் இடம்பிடித்துள்ளன.

ஆறு வருடங்களுக்கு முன் அறிமுகமான டாடா ஜெஸ்ட் கார், குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடாக உள்ளதால் பத்தாம் இடம் பிடித்துள்ளது. மாருதி சூசுகி நிறுவனத்தின் விட்டாரா பிரெஸ்ஸா (Vitara Brezza) ஒன்பதாம் இடத்திலேயும், பத்து வருடத்திற்கு முன்பு இந்தியாவில் அறிமுகமான டொயோட்டா எட்டியோஸ் (Toyota Etios) எட்டாம் இடத்திலும் உள்ளன. மஹிந்திரா மராசோ எம்.பி.வி. (Mahindra Marazzo MPV) காருக்கு அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. ஆறாம் இடத்தில் உள்ளது வோக்ஸ்வாகன் போலோ ஹேட்ச்பேக்( Volkswagen Polo hatchback) கார்.

முதல் ஐந்து இடங்களில் டாடா கார்களின் ஆதிக்கம்தான் அதிகம்… ஐந்தாம் இடத்தில் டாடா டைகோர் மற்றும் டாடா தியாகோ (Tata Tigor and Tata Tiago) என்ற இரு கார்களும் ஒரே தரப்புள்ளிகளுடன் இருக்கின்றன. குழந்தைகளை பாதுகாக்கும் அம்சத்தில் மூன்று நட்சத்திர அந்தஸ்தையும், பெரியவர்களை பாதுகாப்பதில் நான்கு நட்சத்திர அந்தஸ்தையும் இருந்த இரு கார்களுமே பெற்றிருக்கின்றன.


இரண்டு கார்களுமே ஒரே இடத்தைப் பிடித்துள்ளதால் அடுத்து நேரடியாக மூன்றாம் இடத்திற்கு சென்றால் அங்கேயும் டாடாதான். அந்த நிறுவனத்தின் சொகுசு காரான டாடா நெக்சானை மோதவிட்டு சோதித்துப் பார்த்தில் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக இருந்ததால் ஒட்டுமொத்தமாக நான்கு நட்சத்திர அந்தஸ்தை வழங்கியுள்ளது குளோபல் என்.சி.ஏ.பி.

டாடாவின் புதிய அறிமுகமான அல்ட்ராஸ் மற்ற கார்களை பின்னுக்குத் தள்ளி அதிகபட்சமாக ஐந்து நட்சத்திர அந்தஸ்தை பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. முன்வரிசையில் அமரும் பெரியவர்களின் மார்பு பாதுகாப்புக்கு போதுமான அம்சங்கள் உள்ளதால் இந்த காரும் தரவரிசையில் முன்வரிசையில் நிற்கிறது.

முத்தான முதல் இடத்தைப் பிடித்துள்ளது சொகுசு காரான மஹேந்திரா XUV300. நாங்கள் இதுவரை பரிசோதித்த கார்களிலேயே இதுபோன்ற பாதுகாப்பு அம்சம் எந்த காரிலும் இல்லை என பாராட்டியுள்ளது குளோபல் என்.சி.ஏ.பி. பயணிகளின் சிறந்த காப்பான் என சான்றும் அளித்திருக்கிறது அந்த நிறுவனம்…
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading