நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் அறிமுகமானது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்..!

இந்தியாவில் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 9, 2019, 1:30 PM IST
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பின் அறிமுகமானது ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்..!
ஹூண்டாய் கோனா. (Image: manav Sinha/ News18.com)
Web Desk | news18
Updated: July 9, 2019, 1:30 PM IST
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆன ஹூண்டாய் கோனா இன்று வெளியாகி உள்ளது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 452 கி.மீ வரையில் பயணம் செல்லக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது ஹூண்டாய் கோனா. தற்போதைய சூழலில் ஹூண்டாய் கோனா எஸ்யூவி-க்குப் போட்டி ஏதும் இல்லை. முழுவதுமாக வடிவமைக்கப்பட்ட கார்களே முதற்கட்டமாக இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

வரும் காலங்களில் ஹூண்டாய் கோனாவின் உதிரிப் பாகங்கள் சென்னையில் உள்ள உற்பத்தித் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டு கார் தயாராகும் எனக் கூறப்பட்டுள்ளது. 64 kWh லித்தியன் ஐயான் பேட்டரி கொண்ட கோனா எலெக்ட்ரிக் காரின் பீக் திறன் 201.2 bhp ஆகவும் 395Nm ஆகவும் உள்ளது. 64kWh பேட்டரிக்கு சார்ஜ் ஏற்ற 9 மணி நேரம் ஆகும்.


ஆனால், சூப்பர் வேகத்திறன் கொண்ட சார்ஜிங் முறையில் கோனா எஸ்யூவி-க்கு 54 நிமிடங்களில் 80% வரையில் சார்ஜ் செய்ய முடியும். கோனாவில் நவீன தொழில்நுட்ப அம்சங்களான 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் கோனா எலெக்ட்ரிக் காரின் விலை 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: டிமாண்ட் இல்லாததால் வாகன உற்பத்தியைக் குறைத்த மாருதி சுசூகி..!
First published: July 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...