மீட்கப்பட்ட இந்தியாவின் முதல் மாருதி 800!

மாருதி சுசூகி செர்வீஸ் செண்டர் இந்தக் கார் குறித்துக் கேள்விபட்டு இக்காரை மீட்டு வின்டேஜ் தரம் அளிக்க அந்தக் காரை தற்போது சீரமைத்து வருகிறது.

Web Desk | news18
Updated: February 20, 2019, 12:03 PM IST
மீட்கப்பட்ட இந்தியாவின் முதல் மாருதி 800!
முதல் மாருதி 800
Web Desk | news18
Updated: February 20, 2019, 12:03 PM IST
இந்தியாவில் முதல் மாருதி 800 கார் தற்போது மீட்கப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது.

வின்டேஜ் கார்கள் மீதான மோகம் ஒரு நாளும் கார் பிரியர்களுக்குக் குறையவே குறையாது. குறிப்பாக, இந்தியாவில் அதிகப்படியான வின்டேஜ் கார்கள் சீரமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது இந்திய ஆட்டோமொபைல் தொழில்துறையைக் கவுரவிக்கும் வகையில் நாட்டின் முதல் மாருதி 800 கார் பாதுகாக்கப்பட்டுள்ளது.

முதல் மாருதி 800


வெள்ளை நிற முதல் மாருதி 800 டெல்லியைச் சேர்ந்த ஹர்பால் சிங்-க்கு கிடைத்தது. 36 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு லக்கி குலுக்கல் போட்டியில் வென்று அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடமிருந்து இந்தக் காருக்கான சாவியைப் பெற்றுள்ளார் ஹர்பால் சிங்.

ஹர்பால் சிங்-கின் மறைவுக்குப் பின்னர் அந்த முதல் மாருதி 800 கார் பராமரிப்பு இன்றி இருந்துள்ளது. இந்நிலையில் மாருதி சுசூகி செர்வீஸ் செண்டர் இந்தக் கார் குறித்துக் கேள்விபட்டு இக்காரை மீட்டு வின்டேஜ் தரம் அளிக்க அந்தக் காரை தற்போது சீரமைத்து வருகிறது.

முதல் மாருதி 800, 796cc 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே என்ஜின் கட்டமைப்பு தான் இன்றைய ஆல்டோ காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Loading...
மேலும் பார்க்க: இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா குறித்த ஸ்பெஷல் தொகுப்பு..
First published: February 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...