ஓலா, உபேர் ஆகியவற்றை பயன்படுத்துகிறீர்களா...? உங்களுக்கான முக்கிய தகவல்

ஓலா, உபேர் ஆகியவற்றை பயன்படுத்துகிறீர்களா...? உங்களுக்கான முக்கிய தகவல்
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: November 30, 2019, 4:15 PM IST
  • Share this:
பொதுமக்களுக்கு கார்களை வாடகைக்கு வழங்கும் நிறுவங்களான ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் வசூலிக்கும் கமிஷன் மற்றும் கேன்சல் செய்தால் பிடிக்கப்படும் தொகை ஆகியவற்றை நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

போக்குவரத்துதுறையில் சமீப ஆண்டுகளாக ஓலா, உபேர் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. நடுத்தர குடும்பத்தினரின் முதல் தேர்வாக இத்தகைய நிறுவனங்கள் இருக்கின்றன. சமீபத்தில், வாடகை பைக்குகளையும் இது போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

மோட்டார் வாகன உற்பத்தி வீழ்ச்சிக்கு இதுபோன்ற நிறுவனங்களை மக்கள் தேர்வு செய்வது முக்கிய காரணமாக இருப்பதாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னர் கூறியிருந்தார். இந்த நிலையில், ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் வசூலிக்கும் கமிஷன் மற்றும் கேன்சல் செய்தால் பிடிக்கப்படும் தொகை ஆகியவற்றுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


அதன்படி, ஓலா, உபேர் நிறுவனங்களில் புக்கிங்கை கேன்சல் செய்யும் பயணிகளுக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட உள்ளன. அதே போல், ஓட்டுனர்களிடம் இருந்து அதிகபட்சமாக 10% அளவுக்குள் மட்டுமே ஓலா, உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் கமிசன் வசூலிக்கும் வகையிலும் உச்சவரம்பு நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.வாடகை கார்களில் பயணிக்கும் மக்கள் செலுத்தும் வாடகை கட்டணத்தில், ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களின் கமிஷன் அளவு 20 சதவீதமாக உள்ளது. மத்திய அரசு உருவாக்க உள்ள புதிய விதிகளின் படி, வாடகை கார்களில் பயணிப்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில் 10 சதவீதத்திற்குள் மட்டுமே ஓலா, உபேர் நிறுவனங்கள் கமிசன் பெற இயலும். இதன் மூலம், வாடகை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.காலை மற்றும் மாலை பீக் அவர் நேரங்களில் தற்போது வழக்கமான கட்டணத்தை விட ஐந்து மடங்கு வரை கூட ஓலா, உபேர் நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கிறன. புதிய கொள்கையின் படி, அதிகபட்சமாக அடிப்படை கட்டணத்தில் இருந்து 2 மடங்கு மட்டுமே வசூலிக்கும் வகையில் விதிகளை திருத்தப்பட உள்ளன. இதனாலும், மக்களுக்கு பலன்கள் கிடைக்கலாம்.

ஒரு நாளைக்கு ஒரு ஓட்டுநர் புக் செய்யும் ட்ரிப்புகளில் 10 சதவிகித ட்ரிப்புகளுக்கு மட்டுமே பீக் ஹவர் கட்டணம் வசூலிக்க முடியும். உதாரணமாக ஒரு கார் ஓட்டுநர் 30 ட்ரிப்புகளை ஒரு நாளைக்கு ஓட்டுகிறார் என்றால், 3 ட்ரிப்புகளுக்கு மட்டுமே அவர் பீக் ஹவர் கட்டணத்தை வசூலிக்க முடியும்.ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களின் புக்கிங்கை தாங்களாக கேன்சல் செய்தால், அதிகபட்சமாக 100 ரூபாய் வரை அவர்களிடம் இருந்து ஓலா, உபேர் நிறுவனங்கள் அபராதம் வசூலித்துக் கொள்ளலாம்.

உபெர் நிறுவனம்


அளவுக்கு மீறி புக்கிங்கை கேன்சல் செய்தால் அந்த ஓட்டுநருக்கு 2 நாட்களுக்கு புக்கிங் கொடுப்பதை ஓலா, உபேர் நிறுவனங்கள் நிறுத்தி வைக்க முடியும். இதே போல் ஓலா, உபேர் ஆப்கள் மூலமாக வாகனங்கள் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் அதனை பாதியிலேயே கேன்சல் செய்தால் தற்போது 50 ரூபாய் வரை அவர்களிடம் இருந்து அடுத்த பயணத்தின் போது கட்டணம் வசூலிக்கப்படுகிறது. புதிய விதிகளின் படி இந்த கட்டணம் 100 ரூபாய் வரை உயர்த்தப்படும்.

3 மணி நேரத்திற்கு ஒரு முறை பயோமெட்ரிக் அல்லது ஃபேசியல் ரெகக்னிசன் முறையில் ஓட்டுநரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது, பயணிகளுக்கு 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு போன்ற விதிகளும் கட்டாயமாக்கப்பட உள்ளன. இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டால், ஓலா, உபேர் போன்றவற்றை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading