பொருளாதார மந்தநிலையிலும் முதலிடம் பிடித்த ஹூண்டாய்... மாருதி, ஹோண்டாவுக்கு சரிவு!

ஹூண்டாய் வெர்னா தற்போது இந்தியாவில் நான்கு என்ஜின் ரகங்களில் 8.08 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.

Web Desk | news18
Updated: September 11, 2019, 9:03 PM IST
பொருளாதார மந்தநிலையிலும் முதலிடம் பிடித்த ஹூண்டாய்... மாருதி, ஹோண்டாவுக்கு சரிவு!
ஹூண்டாய் வெர்னா
Web Desk | news18
Updated: September 11, 2019, 9:03 PM IST
கார் உற்பத்தி நிறுவனங்களில் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கார் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வருகின்றன. இத்தகைய சூழலிலும் ஆகஸ்ட் மாத விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த போதும் மாருதி சுசூகியின் சியஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ரேபிட், VW வென்டோ, டொயோடா யாரிஸ் ஆகிய கார்கள் சரிவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் மாருதி சியஸ் மற்றும் ஹோண்டா சிட்டி ஆகிய கார்களை இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களுக்குத் தள்ளிவிட்டு ஹூண்டாய் வெர்னா முதலிடத்தில் உள்ளது.


ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் 1,591 வெர்னா கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த டாப் 3 கார்களுக்கு அடுத்தபடியாக ஸ்கோடா புதிதாக இணைந்துள்ளது. ஆகஸ்ட் மாத விற்பனையில் ஹூண்டாய்க்கு முதலிடம் கிடைத்தாலும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 52 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மாருதி சுசூகி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 77 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மூன்றாம் இடத்தில் உள்ள ஹோண்டா 43 சதவிகித வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹூண்டாய் வெர்னா தற்போது இந்தியாவில் நான்கு என்ஜின் ரகங்களில் 8.08 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.

மேலும் பார்க்க: ₹4 லட்சம் வரையில் ஆஃபர்...இந்திய ஹோண்டா கார்களுக்கு சிறப்புத் தள்ளுபடி

Loading...

ஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு
First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...