சென்னையில் தயாரான ஹுண்டாய் வென்யூ - சிறப்பம்சங்கள் என்ன?

Hyundai Venue Launch: ப்ளூலிங் என்கிற புதிய தொழில்நுட்பம் மற்றும் நான்கு மீட்டர் அளவுகொண்ட காம்பேக்ட் எஸ்யூவி காராக வென்யூ இருக்கிறது.

சென்னையில் தயாரான ஹுண்டாய் வென்யூ - சிறப்பம்சங்கள் என்ன?
ஹுண்டாய் வென்யூ
  • News18
  • Last Updated: May 21, 2019, 3:08 PM IST
  • Share this:
வாடிக்கையாளர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹுண்டாய் வென்யூ எஸ்யூவி கார் இன்று அறிமுகமாகிறது.

தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்புதிய வென்யூ எஸ்யூவி (Hyundai Venue) காரை இன்று சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் ஆலையில் தயாரிக்கப்பட்ட இந்த காரின் விலை 6.50 லட்சம் ரூபாய் முதல் தொடங்குகின்றது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.


ப்ளூலிங் என்கிற புதிய தொழில்நுட்பம் மற்றும் நான்கு மீட்டர் அளவுகொண்ட காம்பேக்ட் எஸ்யூவி காராக வென்யூ இருக்கிறது.

10 விதமான நிறங்களில் வென்யூ சந்தைக்கு வர இருக்கிறது.

120 HP மற்றும் 172 Nm விசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் வென்யூவில் பொருத்தப்பட்டுள்ளது.இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை இந்த என்ஜின் மட்டும் பெற்றுள்ளது.

வெனியூ காரில்ல் பாதுகாப்பு சார்ந்த  ஏபிஎஸ், 6 ஏர்பேக்குகள், இஎஸ்பி, ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் சைல்டு இருக்கைகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹீல் ஹோல்ட் அசிஸ்ட், ரியர் கேமரா உடன் ரியர் பார்க்கிங் சென்சார்,  போன்றவற்றை மேம்பட்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

Hyundai Venue காரின் புகைப்படங்கள் கீழே:

First published: May 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்