2020 ஜனவரி முதல் அத்தனைக் கார்களுக்கும் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்!

2020 ஜனவரி முதல் அத்தனைக் கார்களுக்கும் விலையை உயர்த்துகிறது ஹூண்டாய்!
ஹூண்டாய்
  • News18
  • Last Updated: December 13, 2019, 10:00 PM IST
  • Share this:
ஜனவரி 2020 முதல் தனது கார்களின் விலையை உயர்த்துவதாக ஹூண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்து அடுத்த மாதம் வெளியாகும் என தெரிகிறது. இந்தியாவில் உள்ளீட்டுச் செலவு அதிகம் ஆனதாலே இந்த விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்னதாக இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி ஜனவரி முதல் விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தது.

அதே காலகட்டத்தில் டொயோட்டா, மஹிந்திரா, மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்தன.  ஹூண்டாய் மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்களும் ஒரு சேர விலை உயர்வு கிடையாது என அறிவித்தன. ஆனால், தற்போது விலை உயர்வை அமல்படுத்துவதாக ஹூண்டாய் அறிவித்துள்ளது.


புதிதாக BS-VI வெர்ஷனாக அப்டேட் செய்யப்பட்ட கார்களை நிறுவனங்கள் களம் இறக்க உள்ளதால் விலை உயர்வு நிச்சயமாக இருக்கும் என்கின்றனர் ஆட்டோமொபைல் துறையினர்.

மேலும் பார்க்க: 1.31 கோடி ரூபாய்க்கு இந்தியாவில் அறிமுகமானது போர்ஷே கெயின் கூப்பே!
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading